ஒரே QR கோட்.. மொத்த பணமும் காலி...OLX-ல் பழைய சாமானை விற்க முயற்சித்த இளைஞருக்கு காத்திருந்த ஷாக்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இன்றைய தொழில்நுட்ப உலகில் நம்முடைய விரல் அசைவில் நம்மால் எதையும் செய்ய முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது. அதே நேரத்தில் இதனை தவறான வழியில் பயன்படுத்தி ஆபத்தான காரியங்களுக்கு அடித்தளம் போடும் கும்பலும் இருக்கத்தான் செய்கிறது. இணையம் மூலமாக தனது பழைய சாமான்களை விற்க முயற்சித்த இளைஞர் ஒருவர் லட்ச கணக்கில் பணத்தை இழந்திருப்பது இணையவாசிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஒரே QR கோட்.. மொத்த பணமும் காலி...OLX-ல் பழைய சாமானை விற்க முயற்சித்த இளைஞருக்கு காத்திருந்த ஷாக்..!

Breaking: கைது செய்யப்பட்ட ABVP நபர்களை சந்தித்த கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவர் சுப்பையா சஸ்பெண்ட்..!

OLX ல் வலை

மகாராஷ்டிராவில் உள்ள கோரேகான் பகுதியைச் சேர்ந்த 37 வயது மென்பொருள் பொறியாளர் தனது வீட்டில் இருந்த பழைய சாமான்களை பிரபல பழைய பொருள் வாங்கி விற்கும் அப்ளிகேஷனான OLX மூலம் விற்க முடிவு எடுத்திருக்கிறார். இதற்காக OLX தளத்தில் விளம்பரம் ஒன்றினையும் வெளியிட்டிருக்க்கிறார் அவர்.

இந்நிலையில் பொறியாளர் போட்ட விளம்பரத்தைப் பார்த்து மெசேஜ் செய்த ஒருவர், லிஸ்டில் குறிப்பிட்டிருந்த பழைய கப்போர்டு ஒன்றை வாங்கிக்கொள்வதாக குறிப்பிட்டிருக்கிறார். மேலும், அதற்கான விலையாக 4000 ரூபாய் தருவதாக மெசேஜ் அனுப்பிய ஆசாமி குறிப்பிட்டிருக்கிறார்.

மெசேஜ்

இந்நிலையில், கப்போர்டு கேட்டு மெசேஜ் அனுப்பிய நபர், எஞ்சியரின் வாட்சாப் எண்ணிற்கு QR கோட் ஒன்றினை அனுப்பியிருக்கிறார்.  மேலும், அதை ஸ்கேன் செய்து, தான் அனுப்பியுள்ள 2 ரூபாய் வந்துள்ளதா? என பரிசோதிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார். உடனடியாக சாப்ட்வேர் இன்ஜினியரும், அந்த நபர் அனுப்பிய QR Code -யை ஸ்கேன் செய்து, அவர் அனுப்பிய தொகை வந்திருப்பது உறுதி செய்துள்ளார்.

Software Engineer loss 6.8 lakh while try to sell old furniture in OLX

அடுத்ததாக, மீண்டும் ஒரு மெசேஜ்-ல் QR கோடை அனுப்பிய அந்த நபர் முழு தொகையும் வந்திருக்கிறதா என சரிபார்க்க சொல்லியிருக்கிறார். அந்த கோடை எஞ்சினியர் ஸ்கேன் செய்ய முயற்சிக்கும் போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இரண்டாவது QR கோடை ஸ்கேன் செய்தபோது பொறியாளரின் வாங்கி கணக்கிலிருந்து மூன்று தவணைகளாக பணம் எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஓர் அதிர்ச்சி

அதிர்ச்சி அடைந்த இன்ஜினியர் கப்போர்டு வாங்கிய நபருக்கு போன் செய்த போது, அவரோ தனக்கு ஒன்றுமே தெரியாது என்பது போல நடந்த தவறுக்கு மன்னிப்பு கோரிவிட்டு, பணத்தையும் திரும்ப அனுப்புவதாக சொல்லியிருக்கிறார். பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறிய மோசடி ஆசாமி, பாதிக்கப்பட்டவரிடம் தனது சொந்த வங்கிக் கணக்கு விவரங்களைக் கொடுத்து, அதை சாப்ட்வேர் இன்ஜினியர் அவர் நெட்பேங்கிங்குடன் இணைக்கச் சொல்லியிருக்கிறார்.

பணத்தை பெறும் ஆசையில் மோசடி நபர் சொன்ன விஷயங்களை அடுத்தடுத்து செய்ய எஞ்சினியரின் அக்கவுண்டில் இருந்த 6.30 லட்ச ரூபாய் மொத்தம் 10 தவணைகளாக எடுக்கப்பட்டிருக்கிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் பாதிக்கப்பட்ட எஞ்சினியர் புகார் அளித்திருக்கிறார். மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஆன்லைன் மூலமாக, பழைய பொருட்களை விற்க முயற்சித்து பணத்தை இழந்த சம்பவம் இணையவாசிகள் பலரை அதிரவைத்திருக்கிறது.

"எவ்வளவு சொல்லியும் கேக்கல"..மருமகனுக்கு மாமனார் போட்ட ஸ்கெட்ச்.. பரபரப்பு வாக்குமூலம்..!

SOFTWARE ENGINEER, SELL OLD FURNITURE, OLX, QR ஸ்கேன்

மற்ற செய்திகள்