'தாலியின் ஈரம் கூட காயல'... '5 நாளில் தெரிய வந்த சாப்ட்வேர் மாப்பிள்ளையின் உண்மை முகம்'... போட்டோவுடன் போட்டுக்கொடுத்த உறவினர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

திருமணத்தில் மணமக்களை வாழ்த்திவிட்டுச் சென்ற உறவினர் ஒருவர், வேறொரு திருமணத்தில் கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறைந்து போகச் செய்தது.

'தாலியின் ஈரம் கூட காயல'... '5 நாளில் தெரிய வந்த சாப்ட்வேர் மாப்பிள்ளையின் உண்மை முகம்'... போட்டோவுடன் போட்டுக்கொடுத்த உறவினர்!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசிக்கும் மென்பொறியாளர் ஒருவருக்குக் கடந்த 2ம் தேதி khandwa பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இவர்களது திருமணம் சிறப்பாக நடைபெற்ற நிலையில், பெண்ணின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பலரும் திருமணத்திற்கு வந்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள். இந்நிலையில் திருமணம் முடிந்து 5 நாட்கள் கழித்து இந்தூரில் உள்ள Mhow பகுதியில் ஒரு திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்திற்கு, கடந்த 2ம் தேதி khandwa பகுதியில் நடந்த திருமணத்தின் மணப்பெண்ணின் உறவினருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. அவரும் அந்த திருமணத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் மனமேடையை நோக்கிச் சென்ற போது கண்ட காட்சி அவரை அதிர்ச்சியில் உறையச் செய்தது. அங்கு மணமகனாக நின்று கொண்டிருந்தவர், 5 நாட்களுக்கு முன்பு தனது உறவினரின் மகளைத் திருமணம் செய்த நபர் ஆகும்.

Software engineer flees after marrying 2 women in 5 days

இதையடுத்து அந்த திருமண புகைப்படங்களை எடுத்துக் கொண்டு அவர் மணப்பெண்ணின் பெற்றோரிடம் நடந்த விஷயங்களைக் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ந்து போன மணப்பெண்ணின் பெற்றோர், உடனடியாக காவல்நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்கள். போலீசார் சம்பந்தப்பட்ட இளைஞரைத் தேடுவது குறித்து அறிந்த அந்த நபர் தற்போது தலைமறைவாக உள்ளார். இதுகுறித்து பேசிய பெண்ணின் பெற்றோர், அந்த இளைஞர் கட்டிய தாலியின் ஈரம் கூட இன்னும் போகவில்லை.

ஆனால் திருமணம் முடிந்து 5 நாட்களுக்குள் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவருக்குத் திருமணத்திற்காக மட்டும் 10 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளோம். எங்கள் பெண்ணை ஏமாற்றிய அந்த இளைஞருக்குக் கடுமையான தண்டனை கொடுக்கப் பட வேண்டும் என வேதனையுடன் கூறியுள்ளார்கள். திருமணம் முடிந்த 5 நாட்களுக்குள் மென்பொறியாளர் ஒருவர் வேறொரு திருமணம் செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்