‘24 மணிநேரத்தில் 195 பேர் பலி’... ‘இந்தியாவில் சமூக பரவலா?’... 'மத்திய சுகாதாரத்துறை விளக்கம்’!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருவதால், கொரோனா பாதிப்பின் 3 - வது நிலையான சமூக பரவல் என்ற நிலையை கொரோனா பாதிப்பு எட்டிவிட்டதோ என்ற என்னும் நிலையில், இதுகுறித்து பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், ‘இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவல் என்ற நிலையை இன்னும் எட்டவில்லை. லாக்டவுன் அமலில் உள்ள தற்போதைய காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குணமடைந்து வருவது அதிகரித்திருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனாவின் இன்றைய நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி நாடு முழுவதும் 46 ஆயிரத்து 711 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 31 ஆயிரத்து 967 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 13 ஆயிரத்து 160 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், வைரஸ் தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 195 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து நாடு முழுவதும் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 583 ஆக அதிகரித்துள்ளது.