'அப்படி என்ன பகை'... '32 வருஷம், தொடர்ந்து 74 முறை'... 'விடாமல் பழிவாங்கும் நல்ல பாம்பு'... உயிர் பயத்தில் தவிக்கும் அதிர்ச்சி பின்னணி!
முகப்பு > செய்திகள் > இந்தியா32 வருடங்களாக ஒரே நபரை, அதுவும் நல்ல பாம்பு தொடர்ந்து துரத்தி வரும் அதிர்ச்சி நிகழ்வு நடந்துள்ளது.
சினிமாவில் பார்க்கும் சில விஷயங்களைப் பார்க்கும் போது, இது எல்லாம் நிஜ வாழ்க்கையில் நடக்குமா என்ற எண்ணம் பலருக்கும் இருக்கும். ஆனால் சில நேரங்களில் சினிமாவை மிஞ்சும் சில விஷயங்கள் நிஜ வாழ்க்கையில் நடப்பது உண்டு. அந்த வகையில் ஆந்திராவில் கூலித் தொழிலாளி ஒருவர் 32 வருடங்களாக உயிர் பயத்துடன் வாழ்ந்து வருகிறார். சித்தூர் மாவட்டத்தில் உள்ள கும்மரகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுப்பிரமணியம்.
இவர் 5ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த நேரத்தில் முதல் முறையாக இவரைப் பாம்பு கடித்துள்ளது. அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்த சுப்பிரமணியத்தை 32 ஆண்டுகளில் 74 முறை நல்லபாம்பு கடித்துள்ளது. ஆனால் என்ன காரணம் என்பதே தெரியாமல் நல்ல பாம்பு தொடர்ந்து அவரை கடித்துள்ளது. இதன் காரணமாகச் சுப்பிரமணியம் வீட்டைவிட்டு வெளியில் வரவே அச்சம் கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்க்கையை ஓட்டி வருகிறார்.
சொந்த ஊரில் அச்சத்துடன் வாழப் பயந்து, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் கூலி வேலை செய்து பிழைத்து வந்தார். ஆனால் அங்கும் அவருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பெங்களூரு சென்ற சுப்பிரமணியத்தை மீண்டும் பாம்பு கடித்தது. இதனால் வேறு வழி இல்லாமல் மீண்டும் சொந்த ஊருக்கே திரும்பினார்.
இதனிடையே கூலி வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பத்தை ஓட்ட முடியும் என்ற நிலையில் இருக்கும் சுப்பிரமணியம் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவருக்கு எதிரில் நல்ல பாம்பு தோன்றி தரிசனம் கொடுப்பது வழக்கமான செயலாக மாறிவிட்டது. இதனால் பயத்தில் வீட்டிற்குள் சென்று மறைந்து கொள்வது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது. ஒரு கட்டத்தில் பிழைப்பிற்காக வெளியூருக்கும் செல்ல முடியாமலும், சொந்த ஊரில் பிழைப்பு நடத்த முடியாமலும் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பல்வேறு இடங்களில் ஜோசியம் பார்த்தும், குறி கேட்டு உரியப் பரிகாரங்களைச் செய்தும் பலன் கிடைக்கவில்லை. அவரின் மருத்துவச் செலவிற்கே 50 ஆயிரம் வரை செலவும் செய்துள்ள அவர், நான் பார்க்கும் கூலி வேலையில் வருடந்தோறும் ஒரு பெரிய தொகை மருத்துவச் செலவிற்கே ஆவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்துவதாக வேதனையுடன் கூறியுள்ளார்.
இது தொடர்பாகப் பாம்பு பிடிக்கும் தொழில் செய்யும் ரகுராம் கூறுகையில், ''பாம்புகளுக்கு ஞாபக சக்தி என்பது கிடையாது. அப்படி இருக்க இவரை மட்டும் பாம்புகள் அதிலும் நல்ல பாம்புகள் மட்டும் எப்படி தொடர்ந்து கடிக்கிறது என்பது புரியாத புதிராக உள்ளது எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்