ஹேண்டில் பார்க் துவாரத்தில் 'உஷ்.. உஷ்...' சப்தம்...! 'ஸ்கூட்டரில் இருந்த நல்ல பாம்பு...' வைரலாகும் வீடியோ...!
முகப்பு > செய்திகள் > இந்தியாமோட்டார் சைக்கிளை நீண்ட நாட்களுக்கு பிறகு எடுக்க முயன்ற போது, அதிலிருந்து நல்ல பாம்பு படமெடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் அதிகளவில் பராவமல் தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசப் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனங்களை தவிர்த்து மற்ற அனைத்து விதமான நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஐடி நிறுவனம் உட்பட அலுவலக பணியாளர்கள் பலர் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார்கள.
இந்த நிலையில், மக்கள் தங்களுடைய வாகனங்களை நீண்ட நாட்களுக்கு ஒரே இடத்தில நிறுத்தி வைக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் மக்கள் பலரும் கார், பைக் உள்ளிட்டவற்றை காக்கும் பொருட்டு பேட்டரிகளுடனான இணைப்பை துண்டித்தும், ஹேண்டில் பிரேக்கை விடுவித்தும், ரிவெர்ஸ் பார்க்கிங் செய்தும் தங்களுடைய வண்டிகளை கவர் போட்டு மூடி வைத்துள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாகி உள்ளது. அதில் நீண்ட நாட்களாக பார்க் செய்யப்பட்ட ஸ்கூட்டரை உரிமையாளர் ஒருவர் எடுத்துள்ளார். அப்போது சற்றும் எதிர்பாராத விதமாக ஹேண்டில் பார்க் துவாரத்தில் இருந்து நல்ல பாம்பு ஒன்று உஷ் என்ற சத்தமிட்டு சீற்றத்துடன் காணப்பட்டது. இந்த காட்சி வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது.
மேலும் இந்த வீடியோவை பார்த்த சிலர், நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிளில் இருந்து இதுபோன்ற விஷ ஜந்துக்கள் இருந்தால் ஆபத்து தான். இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் மக்கள் பலர் நீண்ட நாட்களாக வாகனங்களை பார்க் செய்வதை தவிர்த்துவிட்டு, அவ்வப்போது அதை சுத்தம் செய்வது நல்லது. இது கார், பைக், ஸ்கூட்டர் என அனைத்து வாகனங்களுக்கும் பொருந்தும் என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் காணப்பட்டது நல்ல பாம்பு என்பதால், அது கொடிய விஷம் கொண்டது. தெரியாதவர்கள் யாரேனும் ஹேண்டில் பாரை தொட்டிருந்தால், பாம்பு கடித்து இறந்திருக்கக்கூடும். தற்போது இந்த வீடியோ அனைவராலும் பகிரப்பட்டு இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
A Spectacle Cobra saying Hi... From the mirror hole in Honda activa.
.
Look at the size this creatures are mean to hide in small places.
.
Whats app forward video from India. @MahaForest @SnakeBytesTV @snakes @NatGeo @WeAnimals @AnimalPlanet @Snakes_CS pic.twitter.com/N3TlS3mssN
— finding__nimo (@nikhilzoology) March 30, 2020