“இவ்வளவு ஆத்திரம் தேவையா”?...தன்னை கொத்திய பாம்பை என்ன செய்தார் தெரியுமா! கோபத்தால் சோகத்தில் முடிந்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் மாநிலத்தில் 70 வயது முதியவர் ஒருவர் தன்னை கடித்த பாம்பை திருப்பி கடித்து கொன்றுவிட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“இவ்வளவு ஆத்திரம் தேவையா”?...தன்னை கொத்திய பாம்பை என்ன செய்தார் தெரியுமா! கோபத்தால் சோகத்தில் முடிந்த சம்பவம்!

குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தில் வயல்வெளி ஒன்றில் விளைந்த மக்காசோளத்தை தொழிலாளர்கள் லாரியில் ஏற்றிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஒரு பாம்பு திடீரென்று வந்துள்ளது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் தப்பியோடிவிட்டனர்.

இந்நிலையில், பர்வாத் கலா பாரியா என்ற முதியவர் தனக்கு பாம்புகளை பிடித்துள்ள முன் அனுபவம் இருப்பதாக கூறி அங்கேயே நின்றுள்ளார். இதனையடுத்து, அவர் அந்த பாம்பை கையில் பிடிக்க முயன்றபோது அது அவரது கைகள் மற்றும் முகத்தில் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த முதியவர் அந்த பாம்பை திருப்பி கடித்து கொன்றுவிட்டார்.

இதையடுத்து, மயக்கமடைந்த பர்வாத் கலா பாரியாவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமத்துள்ளனர். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து, அஜன்வா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

GUJARAT, SNAKE, OLDMAN, DIED