'ஒன்னா.. ரெண்டா?'.. '377 வெப் சைட்கள்!'.. 'அத்தனையும்' அந்த மாதிரி!'.. ஸ்மிருதி இரானி அதிரடி உத்தரவு!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇணையதளத்தில் ஆபாச படங்களும், ஆபாச வீடியோக்களும் அதிகம் உலவுவதால், அவற்றை தடை செய்யக் கோரி, மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் விஜிலா சத்தியானந்த் வேண்டுகோள் வைத்தார்.

இதனை ஆதரித்த சபாநாயகர் வெங்கைய நாயுடு, பலதரப்பட்ட சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருந்தபோதும், இதுபோன்ற சைட்கள் முடக்கப்படாமல் இருப்பதாகவும், இது பெற்றோர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தருவதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு பதில் அளித்த மத்திய பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆபாச படங்கள், வீடியோக்கள் அடங்கிய 377 வெப் சைட்கள் மீது புகார் வந்துள்ளதாகவும் அவற்றின் மீது 50 FIR நடவடிக்கைகள் எடுக்கப்படவும், விசாரிக்கவும் நீக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
SMRITIIRANI