‘சொன்னாங்களே.. செஞ்சாங்களா?’ ஆவேசமாகக் கேட்ட அமைச்சர்.. ‘டக்குன்னு’ பல்பு கொடுத்த மக்கள்! வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது பொதுமக்களிடம் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி பல்பு வாங்கியுள்ளார்.

‘சொன்னாங்களே.. செஞ்சாங்களா?’ ஆவேசமாகக் கேட்ட அமைச்சர்.. ‘டக்குன்னு’ பல்பு கொடுத்த மக்கள்! வைரல் வீடியோ!

மக்களவை தேர்தலில் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு வரும் 12 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் ஆளும் கட்சியான பாஜகவும், காங்கிரசும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், பாஜக தனது இந்துத்துவா அஸ்திரத்தின் மூலம் பல தொகுதிகளை அறுவடை செய்ய பெண் சாமியார் சாத்வி பிரக்யாவை போபால் தொகுதியில் பாஜக களம் இறக்கியுள்ளது.

இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இராணி பங்கேற்றார். அப்போது, பேசியவர் “சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று ராகுல் காந்தி கூறினார். உங்களது கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதா?” என்று கூட்டத்தில் அமர்ந்திருந்தவர்களை நோக்கி கேட்டார்.

இந்நிலையில், அமைச்சர் கேட்ட கேள்விக்கு அங்கு கூடியிருந்த மக்கள் அனைவரும், “ஆமாம், எங்கள் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது” என்று கோரஸாக கூறினர். இதனால், ஸ்மிருதி ராணி தர்ம சங்கடமான நிலைக்கு உள்ளானார்.

இதனையடுத்து, சில நிமிடங்கள் தடுமாறிய அவர் பின்னர், தனது பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றி பிரசாரத்தை தொடங்கினார். இந்நிலையில், இவர் மேடையில்  பேசிய வீடியோவை மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

 


 

LOKSABHAELECTIONS2019, BJP, MADHYA PRADESH, SMRITI IRANI, BLOOPERS