'நடந்து நடந்து டயர்ட் ஆன குழந்தை...' 'சூட்கேசில் தள்ளிக்கொண்டு போன அம்மா...' வைரலான வீடியோ... !

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவும், அதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மற்றும் மாநில அரசு பொது ஊரடங்கை அமலில் கொண்டு வந்தது.

'நடந்து நடந்து டயர்ட் ஆன குழந்தை...' 'சூட்கேசில் தள்ளிக்கொண்டு போன அம்மா...' வைரலான வீடியோ... !

இதுவரை மருந்தே கண்டுபிடிக்காத இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும், பரவும் வீதத்தை குறைக்கவும் உரடங்கும், மக்கள் தனித்திருத்தலும் தான் உலக நாடுகள் அனைத்தும் கடைபிடித்து வருகின்றனர்.

ஊரடங்கு காலத்தில் பொருளாதாரத்திற்காகவும், வேலைக்காகவும் ஊர் விட்டு ஊரும், மாநிலம் விட்டு மாநிலம் வந்த தொழிலாளர்கள் சொந்த இடத்திற்கு போக முடியாமல் திண்டாடி வருகின்றனர்.

மத்திய மற்றும் மாநில அரசுகள் வெளியூர் தொழிலாளர்களுக்கு சிறப்பு இரயில் மற்றும் பஸ் சேவைகளை தற்போது ஏற்படுத்திருந்தாலும் சிலர் கால் நடையாகவே தங்களின் நிலம் நோக்கி பயணிக்கின்றனர்.

அவ்வாறு தான் ஒரு குடும்பம் உத்திர பிரதேச மாநிலம் ஆக்ராவில் சாலையில் நடந்து சென்ற போது, குழந்தை நடக்க முடியாமல் சோர்வாக காணப்பட்டது. உடனே அவனது அம்மா குழந்தையை தான் தள்ளி சென்ற சூட்கேஸில் வைத்து அதில் உள்ள வீல்கள் உதவியோடு தனது குழந்தையை சுமந்து செல்கின்றார். இந்த வீடியோவானது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ தற்போது காண்போரின் மனதை கரைய செய்துள்ளது.