'24 வருடம் பூட்டியே கிடந்த லிஃப்ட்'... 'சர்வீஸ் செய்ய இரும்பு கதவை தள்ளிய ஊழியர்'... 'உள்ளே கண்ட காட்சியை பார்த்ததும் சுத்தியல், ஸ்பானரை போட்டுவிட்டு ஓட்டம்'... அதிர்ந்துபோன மருத்துவமனை!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

மருத்துவமனை ஒன்றில் 24 வருடங்களாக லிஃப்ட் ஒன்று செயல்படாமல் இருந்துள்ளது.

'24 வருடம் பூட்டியே கிடந்த லிஃப்ட்'... 'சர்வீஸ் செய்ய இரும்பு கதவை தள்ளிய ஊழியர்'... 'உள்ளே கண்ட காட்சியை பார்த்ததும் சுத்தியல், ஸ்பானரை போட்டுவிட்டு ஓட்டம்'... அதிர்ந்துபோன மருத்துவமனை!

உத்தரப்பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ளது கைலி. இங்கு அரசு மருத்துவமனை ஒன்று உள்ளது. 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையின் ஒரு லிஃப்ட் கடந்த 1997 ஆம் ஆண்டு முதல் செயல்படவில்லை. இதனால் யாரும் அந்த லிஃப்டை யாரும் பயன்படுத்தவில்லை. மருத்துவமனை நிர்வாகமும் அதனைக் கண்டுகொள்ளாததால் அது பூட்டியே கிடந்தது.

Skeleton found in hospital’s non-functional lift opened after 24 years

இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மாடி படி ஏறுவதற்கு மிகவும் சிரமப்படாததால், அந்த லிஃப்ட்யை சரி செய்து நோயாளிகளின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரலாம் என முடிவு செய்தார்கள். அதன்படி 24 வருடங்களுக்குப் பிறகு கடந்த 1 ஆம் தேதி, ரிப்பேர் வேலைக்காக அந்த லிஃப்டை ஊழியர் ஒருவர் திறந்து பார்த்துள்ளார்.

அப்போது அங்குப் பார்த்த காட்சியைப் பார்த்த அந்த ஊழியர் தான் கொண்டு வந்த பொருட்களை அங்கேயே போட்டு விட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியுள்ளார். ஊழியரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த மருத்துவமனை ஊழியர்கள்,  24 வருடங்களாகப் பூட்டியே கிடந்த லிஃப்ட்க்குள் மனித எலும்புக் கூடு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார்கள்.

Skeleton found in hospital’s non-functional lift opened after 24 years

இதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த அவர்கள், அந்த எலும்புக் கூடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அது ஆண் எலும்புக்கூடு என்பது தெரியவந்துள்ளது. அவர் யார்? உள்ளே மூச்சுத்திணறி இறந்தாரா? அல்லது யாராவது கொலை செய்து அவரை இங்குக் கொண்டு போட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Skeleton found in hospital’s non-functional lift opened after 24 years

அதோடு கடந்த 24 வருடங்களில் அந்தப் பகுதியில் யாரும் காணாமல் போயிருக்கிறார்களா என்பது பற்றிய விவரங்களையும் அவர்கள் சரிபார்த்து வருகின்றனர். இதற்கிடையே எப்போதும் ஆள் நடமாட்டம் இருக்கும் மருத்துவமனையில் 24 வருடங்களாக மனித எலும்புக் கூடு கிடந்துள்ள சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்