பேருந்தை பிடிக்க 'இறங்கிய' சிறுமிக்கு... நொடியில் 'நடந்த' பரிதாபம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நான்காம் கட்ட ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதிலும் பல்வேறு பகுதியிலுள்ள புலம்ப்பெயர் தொழிலாளர்கள் கடும் சிரமத்திற்குள் ஆகி வருகின்றனர். வருமானமும், தொழிலும் இல்லாத காரணத்தால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பல நூறு கிலோமீட்டர் நடந்தே பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்தை பிடிக்க 'இறங்கிய' சிறுமிக்கு... நொடியில் 'நடந்த' பரிதாபம்!

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் புலம் பெயர் தொழிலாளர் ஒருவரின் ஆறு வயது மகள் லாரியில் அடிபட்டு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 13 பேர் கொண்ட புலம்பெயர் தொழிலார்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தின் சீதாப்பூர் மாவட்டத்திற்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது வழியில் வந்த லாரியில் லிப்ட் கேட்டு தொழிலாளர்கள் கொஞ்சம் தூரம் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து லாரியில் இருந்து இறங்கி மற்றொரு பேருந்தில் ஏற முற்பட்ட போது, தொழிலாளர் ஒருவரின் ஆறு வயது மகள் லாரியில் அடிபட்டு உயிரிழந்துள்ளார். சிறுமி பலியானதை தொடர்ந்து லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். தப்பி ஓடிய டிரைவரை போலீசார் தேடி வரும் நிலையில் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்லும் ஏற்பாடை மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.

நாள்தோறும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நடந்து வரும் இது மாதிரியான சம்பவங்கள் மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.