கொரோனாவின் பிடியிலிருந்து 'தப்பிய' ஒரே 'இந்திய' மாநிலம்!... 'இதுதான்' காரணம்... 'பகிர்ந்துள்ள' நிர்வாக அதிகாரிகள்...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பாதிப்பு இல்லாத ஒரே மாநிலமாக சிக்கிம் இருந்து வருகிறது.
கொரோனா வைரஸின் பிடியிலிருந்து தப்பிய ஒரே இந்திய மாநிலமாக சிக்கிம் இருந்து வருகிறது. அங்கு கொரோனா பாதிப்பு ஏற்படாததற்கு மாநில அரசின் சிறப்பான கட்டுப்பாட்டு நடவடிக்கைளே காரணம் என பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இதுகுறித்துப் பேசியுள்ள அம்மாநில நிர்வாக அதிகாரிகள், "சிக்கிமில் மார்ச் 5ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் தடை செய்யப்பட்டனர். புகழ்பெற்ற நாதுலாவுக்கு வருகைக்கான அனுமதியை மறுத்தது, வெளி நாட்டுப் பயணிகளுக்கான இன்னர் லைன் பெர்மிட்டுகளை தடை செய்தது போன்றவை இதுவரை எடுக்கப்பட்ட முக்கியமான நடவடிக்கைகளாகும். முதல்வர் பிரேம்சிங் தமங் தலைமையிலுள்ள சிக்கிம் கிரந்திகரி மோர்ச்சா ஆட்சி நாதுலா எல்லை அருகே சீன-இந்தியா வர்த்தகத்தையும் தடை செய்தது. இதுபோன்ற பல சிறப்பான நடவடிக்கைகள் மூலமே சிக்கிம் கொரோனா பாதிப்பு இல்லாத மாநிலமாக தொடர்ந்து திகழ்ந்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளனர்.