Shraddha murder case : ஷ்ரத்தா இறந்த பின்.. அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் Transfer செய்யப்பட்டதா? மொத்த வழக்கையும் திருப்பி போட்ட பரபரப்பு தகவல்கள்!!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம், கடும் அதிர்வலைகளை தொடர்ந்து ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்தடுத்து வெளியாகும் தகவலும் இன்னும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது.

Shraddha murder case : ஷ்ரத்தா இறந்த பின்.. அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் Transfer செய்யப்பட்டதா? மொத்த வழக்கையும் திருப்பி போட்ட பரபரப்பு தகவல்கள்!!

Also Read | "என்ன கேமரால காட்டுவீங்களா இல்லையா?".. சீரியஸா பேசிட்டு இருந்த செய்தியாளர்.. குட்டி யானை க்யூட்டா செஞ்ச விஷயம்.. வைரல் வீடியோ!!

டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார்.

அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷனில் இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. ஷ்ரத்தா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அமீனை வற்புறுத்தியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அமீன், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Shraddha murder case her bank transaction helped to race aftab

தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அமீன் வீசியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர். அமீன் மீது IPC 302 (கொலை), 201 (தடயங்களை அழிக்க முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இது தவிர, ஷ்ரத்தாவின் நண்பர்கள் தெரிவித்த விஷயம் உள்ளிட்ட பல்வேறு தகவலும் விசாரணையில் வெளியான வண்ணம் உள்ளது. அப்படி ஒரு சூழலில், ஷ்ரத்தாவை கொலை செய்த பின்னர், அஃப்தாப் எப்படி போலீசாரிடம் சிக்கினார் என்பது பற்றி சில தகவல் கிடைத்துள்ளது.

Shraddha murder case her bank transaction helped to race aftab

கடந்த மே மாதமே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக அவர் யாருடனும் தொடர்பில் இல்லாமல் போனதன் சந்தேகத்தில் தான் அஃப்தாப் விசாரணை வளையத்தில் வந்தார். முதலில் ஷ்ரத்தா வீட்டில் இருந்து கடந்த மே 22 ஆம் தேதியன்று சண்டை போட்டு கொண்டு வெளியேறிய பின் அவருடன் தொடர்பில் இல்லை என அஃப்தாப் போலீசார் விசாரணையில் கூறி இருந்தார்.

ஆனால், மே 26 ஆம் தேதி, ஷ்ரத்தா வங்கிக் கணக்கில் இருந்து சுமார் 54,000 ரூபாய் அஃப்தாப் வாங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ள்ளது. மேலும், மே 31 ஆம் தேதி ஷ்ரத்தா இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து அவரது நண்பருக்கு மெசேஜ் சென்றதும் உறுதியானது. ஆனால், மே 22 ஆம் தேதியுடன் ஷ்ரத்தாவை தொடர்பு கொள்ளவில்லை என கூறும் அதே நிலையில், வங்கி கணக்கில் இருந்து பணம் அனுப்பப்பட்டிருந்த விஷயங்கள், அப்படியே வழக்கை திருப்பி போட்டிருந்தது.

Shraddha murder case her bank transaction helped to race aftab

அதே போல, அஃப்தாப்பின் குடும்பமும் சில வாரங்களுக்கு முன்பே தலைமறைவானதாகவும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மும்பையில் இருந்த அவர்கள் வேறு இடம் செல்ல அஃப்தாப் உதவியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | 59 வயதில் விவாகரத்து கேட்ட தம்பதி.. 69 வயதில் மீண்டும் இணைந்த சுவாரஸ்யம்!!.. நெகிழ்ந்து போன நெட்டிசன்கள்

SHRADDHA, SHRADDHA MURDER CASE, DELHI MURDER CASER

மற்ற செய்திகள்