காதலன் செய்ய போகும் கொலையை 2 வருஷம் முன்னாடியே கணிச்ச ஷ்ரத்தா??.. 2020 ஆம் ஆண்டில் அவரே எழுதிய கடிதம்??.. பரபரப்பு தகவல்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம்பெண் கடந்த மே மாதம் அவரது காதலரால் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஆறு மாதங்கள் கழித்து சமீபத்தில் தெரிய வந்து கடும் பீதியை உண்டு பண்ணி இருந்தது.

காதலன் செய்ய போகும் கொலையை 2 வருஷம் முன்னாடியே கணிச்ச ஷ்ரத்தா??.. 2020 ஆம் ஆண்டில் அவரே எழுதிய கடிதம்??.. பரபரப்பு தகவல்

Also Read | நடிகர் செந்தில் முதுகில் எட்டி உதைச்ச ரசிகர்.. மிதிச்சதுக்கு அப்புறம் சொன்ன காரணம்.. ஷூட்டிங்கில் நடந்த throwback சம்பவம்!! நினைவுகூர்ந்த நடிகர்

இந்த வழக்கு தொடர்பாக ஷ்ரத்தாவின் காதலர் அஃப்தாப் குறித்து பல திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி வந்தது.

முன்னதாக, டெல்லியில் தனது காதலருடன் இணைந்து வாழ்ந்து வந்த இளம்பெண் ஷ்ரத்தா திடீரென நீண்ட நாளாக காணாமல் போயுள்ளார்.

அப்படி ஒரு சூழலில் இது குறித்து ஷ்ரத்தாவின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்தனர். இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தாவுடன் லிவிங் டுகெதர் ரிலேஷனன்ஷிப்பி இருந்து வந்த அவரது காதலர் அஃப்தாப்பை போலீசார் விசாரித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அடிக்கடி காதலியுடன் சண்டை போட்டு வந்ததன் பெயரில் கடும் ஆத்திரத்தில் இருந்த அஃப்தாப், ஷ்ரத்தாவை கொலை செய்து அவருடைய உடலை 35 பாகங்களாக வெட்டி, ஃபிரிட்ஜில் வைத்திருந்ததாகவும் தெரிய வந்தது.

Shraddha aaftab case letter written in 2020 reportedly

தினமும் இரவு 2 மணியளவில் உடல் பாகங்களை எடுத்துச் சென்று டெல்லியின் பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் விசாரணையில் உறுதியானது. இதனையடுத்து, காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடர்ந்து வந்தனர்.

கடந்த மே மாதமே ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டிருந்த நிலையில், நீண்ட நாட்களாக அவர் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் யாருடனும் தொடர்பில் இல்லை என்பதால் சந்தேகத்தில் போலீசிடம் புகாரளிக்க, அஃப்தாப் சிக்கிக் கொண்டார். இந்த வழக்கு குறித்து பல்வேறு தகவல்களும் வெளியான வண்ணம் உள்ளது. ஒன்றாக ஷ்ரத்தா மற்றும் அஃப்தாப் இணைந்து வாழ தொடங்கிய கொஞ்ச காலத்திலேயே இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்ததாகவும், அஃப்தாப் ஷ்ரத்தாவை அடிக்கவும் செய்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

அப்படி ஒரு சூழலில், தற்போது 2020 ஆம் ஆண்டு ஷ்ரத்தா எழுதிய கடிதம் தொடர்பாக வெளியான தகவல், கடும் அதிர்வலைகளை மீண்டும் இந்த வழக்கில் உண்டு பண்ணி உள்ளது.

Shraddha aaftab case letter written in 2020 reportedly

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அஃப்தாப் தன்னை அடித்து வருவது குறித்து தனது நண்பர்களிடம் ஷ்ரத்தா தெரிவித்துள்ளார். அப்படி ஒரு சூழலில், 2020 ஆம் ஆண்டு அஃப்தாப் குறித்து போலீசில் புகார் கொடுக்க ஷ்ரத்தா எழுதிய கடிதம் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளி வந்துள்ளது. 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஷ்ரத்தா இந்த கடிதம் எழுதியதாக தகவல் தெரிவிக்கும் நிலையில், ஆறு மாதமாக அடித்து துன்புறுத்தி வரும் அஃப்தாப், தன்னை கொலை செய்து துண்டு துண்டாக வீசி விடுவேன் என மிரட்டியதையும் ஷ்ரத்தா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த புகாரில், அஃப்தாப் பெற்றோருக்கும் மகன் என்னை அடிப்பதும் கொலை செய்வதாக மிரட்டுவது தெரியும் என்றும் நாங்கள் ஒன்றாக வாழ்ந்து வருவது அறிந்து வார இறுதியில் அங்கே வந்து சந்திப்பதையும் ஷ்ரத்தா அதில் குறிப்பிட்டுள்ளார். எனக்கு ஏதாவது ஆபத்து நேர்ந்தால் அதற்கு அஃப்தாப் தான் பொறுப்பு என அந்த கடிதத்தில் ஷ்ரத்தா குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அப்போதே காதலன் செய்ய போவது குறித்து ஷ்ரத்தா கணித்திருந்த விஷயம், கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read | பங்களாதேஷ் தொடரிலும் ஜடேஜாவுக்கு வாய்ப்பில்லை.. "இது தான் காரணமா?".. பிசிசிஐயின் Official லிஸ்ட் இது தான்!!

SHRADDHA, SHRADDHA CASE, SHRADDHA AAFTAB CASE

மற்ற செய்திகள்