வெளிநாடுகளை 'மிரட்டி' வந்த ஏ.ஒய்.4.2 ரக கொரோனா... கடைசியில நம்ம 'பக்கத்து மாநிலத்துக்கே' வந்துடுச்சு...! - உறுதி செய்த சுகாதாரத் துறை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா வைரஸின் புதிய வகையான ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ் கர்நாடகாவில் பரவியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடுகளை 'மிரட்டி' வந்த ஏ.ஒய்.4.2 ரக கொரோனா... கடைசியில நம்ம 'பக்கத்து மாநிலத்துக்கே' வந்துடுச்சு...! - உறுதி செய்த சுகாதாரத் துறை...!

வெளிநாடுகளான பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யாவில் ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவி வருகிறது. இந்த அதிவிரைவாகப் பரவும் தன்மை கொண்ட புதிய வகை கொரோனா வைரஸ் தற்போது கர்நாடகாவில் பரவியுள்ளது.

shocking AY4.2 corona virus has also spread in Karnataka

இதுவரை கர்நாடகாவில் மொத்தம் 7 பேருக்கு இந்த ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து பெங்களூருவில் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த  மாநில சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் ஆணையர் டி ரன்தீப் பேட்டியளித்துள்ளார்.

அதில், 'கர்நாடகாவில் ஏ.ஒய்.4.2 ரக கொரோனா வைரஸ் 7 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. அதில், பெங்களூருவில் 3 பேரும் மாநிலத்தின் பிற பகுதிகளில் 4 பேரும் புதிய வகை கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

shocking AY4.2 corona virus has also spread in Karnataka

வெளிநாடுகளில் பரவி வந்த இந்த புதிய வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கர்நாடகாவில் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் முயற்சியாக, வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கொரொனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருப்பது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

அதிவேகமாக பரவும் தன்மை கொண்ட இந்த புதிய வகை ஏ.ஒய்.4.2 ரக கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும், இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்' எனவும் கூறியுள்ளனர்.

மற்ற செய்திகள்