'சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக...' 'நாம எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்கணும் ...' 'அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கணும் ...' கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாத்தான்குளம்  கொடூரத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட் செய்துள்ளார்.

'சாத்தான்குளம் கொடூரத்திற்கு எதிராக...' 'நாம எல்லாரும் சேர்ந்து குரல் கொடுக்கணும் ...' 'அந்த குடும்பத்திற்கு நீதி கிடைக்கணும் ...' கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ட்வீட்...!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தன்குளத்தில் கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். கொரோனா அச்சம் காரணமாக அமலில் உள்ள நிலையில் கடந்த 19ஆம் தேதி பொதுமுடக்க நேரத்தை கடைபிடிக்காமல் கடையைத் திறந்ததாகக் கூறி ஜெயராஜ் மற்றும் பென்னீஸ் ஆகியோரை சாத்தன்குள காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் கைது செய்யப்பட்டனர்.

அதையடுத்து ஜூன் 21 தேதி அதிகாலை 2.30 மணிக்கு, இருவரையும் நீதிபதியிடம் வீடியோ அழைப்பு மூலம் ஆஜர் படுத்தி, கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் பென்னீஸ் என்பவர் நெஞ்சுவலி காரணமாக இறந்ததாகவும், அடுத்த நாள் அவரின் தந்தை ஜெயராஜ் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இறந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டது.

போலீசார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் விசாரணைக்காக அழைத்து சென்ற இருவரையும் அடித்து கொலை செய்து விட்டதாக பல்வேறு தரப்பில் கூறப்பட்டது. இதன்காரணமாக வணிகர் சங்க மக்கள் மற்றும் சாத்தான்குளம் பகுதி மக்கள் சேர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு நேற்று தண்டத்தை ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிஸ் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தந்தை மகன் இறந்த இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரைப்பட நடிகரான ஜெயம்ரவி இந்த விவகாரம் தொடர்பாக ட்வீட் செய்து, #JusticeForJeyarajAndFenix என்ற ஹேஸ்டேக்கையும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "தமிழ்நாட்டில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நடந்த கொடூரத்தைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். இதற்கு எதிராக நாம் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் இறந்தவர்களின் குடும்பத்துக்கு நீதி வழங்கப்பட வேண்டும்" எனத் தெரிவித்து அவரும் #JusticeForJeyarajAndFenix என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் நடந்த இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என கூறலாம்.

 

 

மற்ற செய்திகள்