'இது என் மொத்த உழைப்பு...' 'ஆனாலும் வேற வழி இல்ல...' 'ஒரு தொழில் பண்ண என்ன பாடு பட வேண்டியது இருக்கு...' - அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சலூன் கடைக்காரர்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபுனே நகரில் தன் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தங்க ரேஸரில் முடி சவரம் செய்யும் சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக பல கைத்தொழில்கள், நடுத்தர வர்க்கத்தினர் செய்துவந்த தொழில்கள் எல்லாம் சரியும் நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்திருக்கும் சமயத்தில் தொழில் முனைவோர் தங்கள் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம் பல சலுகைகளை அளித்துவருகின்றனர்.
அதுபோல புனேவில் ஊரடங்கு பிறகு கடையை திறந்த புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட்டைச் சேர்ந்த அவினாஷ் போருண்டியா என்பவர் தன் சலூன் கடைக்காரர் வாடிக்கையாளர்களுக்கு தங்க ரேஸரில் முடி சவரம் செய்து வருகிறார்.
இதுகுறித்து கூறும் அவர், 'ஊரடங்கு தளர்த்தப்பட்டு என் கடையை திறந்த போது அவ்வளவாக வாடிக்கையாளர்கள் வருவதில்லை. என்னுடைய பழைய கஸ்டமர் பலபேர் முடிவெட்ட வருவதை தவிர்த்தனர்.
பல நாள் யோசனைக்கு பிறகு தான் வாடிக்கையாளர்களை ஈர்க்க ரூ .4 லட்சம் மதிப்புள்ள தங்க ரேஸரைப் வாங்கினேன். 80 கிராம் எடையுள்ள இந்த தங்கத்தால் ஆன ரேஸர் என்னுடைய பல வருட சேமித்த மொத்த உழைப்பு. தங்கத்தால் சவரம் செய்தாலும் என் வாடிக்கையாளர்களுக்கு ரூ .100 மட்டுமே வசூலிக்க்கிறேன்' எனக் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்