Jai been others

எங்க மகன் 'வீட்டுக்கு' வந்து எத்தனை நாளாச்சு...?! மகன் 'ஜெயில்ல' இருந்து வாரார்னு தெரிஞ்ச உடனேயே... - 'களைகட்டிய' ஷாருக்கான் வீடு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போதைப்பொருள் பயன்படுத்திய சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கானுக்கு ஜாமீன் கிடைத்துள்ள நிலையில் ஷாரூக்கானின் இல்லம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

எங்க மகன் 'வீட்டுக்கு' வந்து எத்தனை நாளாச்சு...?! மகன் 'ஜெயில்ல' இருந்து வாரார்னு தெரிஞ்ச உடனேயே... - 'களைகட்டிய' ஷாருக்கான் வீடு...!

கடந்த அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்திய சம்பவத்திற்காக பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யபட்டார்.

Shah Rukh Khan's house is decorated with colored lights.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரின் கோரிக்கைக்காக நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் தராமல் பல மனுக்களை தள்ளுபடி செய்தது.

ஷாருக்கான் மற்றும் சட்டத்துறை வல்லுநர்களின் கடும் முயற்சிக்கு பின் கடைசியாக மும்பை நீதிமன்றம் ஆர்யன் கானுக்கு ஜாமீன் கொடுத்துள்ளா நிலையில், ஆர்யன் கான் சனிக்கிழமை (30-10-2021) அன்று ஜாமீனில் விடுவிக்கபடுவார் என கூறப்பட்டது.

Shah Rukh Khan's house is decorated with colored lights.

ஆர்தர் சாலைச் சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் நிதின் வய்ச்சல் சனிக்கிழமை மாலை 5.35 மணிக்குள் விடுதலை செய்யப்படுவது குறித்த அறிக்கை சிறையின் வாசலில் உள்ள ஜாமீன் பெட்டியில் போட்டால் ஆர்யன் கான் உடனடியாக விடுவிக்கப்படுவார் எனக் கூறியுள்ளார்.

மேலும், ஜாமீன் உத்தரவில் ஆர்யன் கான் ஒவ்வொரு வெள்ளிக் கிழமை அன்றும் போதை மருந்து தடுப்புப் பிரிவு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டும் என்றும், தனது பாஸ்போர்டைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Shah Rukh Khan's house is decorated with colored lights.

இந்நிலையில், ஷாருக்கானின் மொத்த குடும்பமும் ஆர்யன் கானின் வருகைக்காக காத்துக் கொண்டுள்ளனர். மும்பையில் உள்ள 'மன்னத்' என்றழைக்கப்படும் ஷாரூக்கானின் இல்லத்தில் வண்ண விளக்குகளும், அலங்காரங்களும் செய்யப்பட்டு வருகிறது.

இல்லத்தின் மேல் மாடியில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டின் பிற பகுதிகள் கண்ணுக்குத் தெரியாதவாறு பெரிய திரைச் சீலைகளால் மறைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதோடு, இந்த அலங்காரங்கள் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

மற்ற செய்திகள்