6000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் பெயர் இல்லை.. வெளியான பரபரப்பு தகவல்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

போதைப்பொருள் புகாரில் இருந்து ஆர்யன் கான் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6000 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல்.. போதைப்பொருள் வழக்கில் ஆர்யன் கான் பெயர் இல்லை.. வெளியான பரபரப்பு தகவல்..!

பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான், மும்பையில் இருந்து கோவா சென்ற ஆடம்பர கப்பலில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஆர்யன் கான் 4 வாரம் வரை சிறையில் இருந்தார். ஆரம்பத்தில் இந்த வழக்கை மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரித்தனர்.

Shah Rukh Khan son Aryan Khan cleared in drugs case

அப்போது இந்த வழக்கை விசாரித்த அதிகாரி சமீர் வாங்கடே மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது. சமீர் வாங்கடே, ஷாருக் கானை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார். இதனை அடுத்த இந்த வழக்கு விசாரணையில் இருந்து சமீர் வாங்கடே விடுவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து டெல்லியில் இருந்து சிறப்பு விசாரணைக்கு குழு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இந்நிலையில் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் 6000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில் ஆர்யன் கான் உட்பட 5 பேர் பெயர்கள் இடம் பெறவில்லை என சொல்லப்படுகிறது. மேலும் ஆர்யன் கானுக்கு எதிராக போதிய ஆதாரம் இல்லை என்றும், அவரிடம் போதைப்பொருள் இல்லை என்றும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ARYANKHAN

மற்ற செய்திகள்