'தூங்கிட்ருந்த ஒரு வயசு குழந்தைய...' 'புதர் மறைவுல வச்சு`... - நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரு வயது குழந்தை என்றும் பாராமல் கொடூரமாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம் பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'தூங்கிட்ருந்த ஒரு வயசு குழந்தைய...' 'புதர் மறைவுல வச்சு`... - நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்!

பஞ்சாபின் மொஹாலி மாவட்டத்தில் ஒரு வயது குழந்தையை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக ஹோட்டலில் பணிபுரியும் ஓம் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பஞ்சாபின் பாட்டியாலா சாலையில் புதிதாக கட்டப்படும் கட்டிடத்தில், கட்டிட தொழிலாளியாக பணிபுரியும் தாய் ஒருவர் தினமும் வேலைக்கு செல்லும் போது தன் ஒரு வயது குழந்தையை அழைத்து செல்வது வழக்கம். அதே போல் கடந்த சனிக்கிழமை அன்று, குழந்தையின் தாய் தான் பணிபுரியும் கட்டிடத்தின் அருகிலுள்ள பூங்காவில் இருக்கும் மரத்தின் கீழ் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு தன் பணியை கவனித்து வந்துள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸின் அறிக்கையின்படி, இந்நிலையில் பாட்டியாலா சாலையில் அமைந்துள்ள ஒரு ஹோட்டலின் வீட்டு பராமரிப்புத் துறையில் பணிபுரியும் ஓம் பிரகாஷ், மரத்தடியில் இருந்த தன் குழந்தையை தூக்கி சென்று புதரின் மறைவில் பாலியல் வன்கொடுமை செய்வதை கவனித்து கத்தி கூச்சலிட்டுள்ளார். இதைக்கவனித்த ஓம்பிரகாஷ் சத்தம் கேட்டதும் குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு ஓடி சென்றுள்ளார்.

தற்போது பாதிக்கப்பட்ட குழந்தை டகோலியில் அமைந்துள்ள ஒரு சமூக சுகாதார மையத்தில் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறது. மேலும் குழந்தை ஒரு இக்கட்டான சூழலில் தான் இருப்பதாக மருத்துவமனை கூறியுள்ளது.

ஒரு வயது குழந்தையை கொடூர நிலைக்கு ஆளாக்கிய ஓம் பிரகாஷ் என்பவரின் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) பிரிவு 376 மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல் (போக்ஸோ) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளை போலீசார் பதிவு செய்துள்ளனர்.

இந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாது இந்தியாவையே உலுக்கும் வகையில் இருக்கிறது.

மற்ற செய்திகள்