'கொரோனா வார்டுக்குள் நடந்த பாலியல் வன்கொடுமை...' 'சிசிடிவி செக் பண்ணி பார்த்தப்போ...' 'கருக்கலைப்பு செய்திருந்த பெண்ணை...' அதிர வைக்கும் கொடூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் பரிசோதனை வார்டில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் இறந்த செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுயுள்ளது. மேலும் சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் பீகார் கயா மாவட்டத்திற்கு திரும்பியிருந்தார். இருமாதங்களுக்கு முன்பு அவர் கருக்கலைப்பு செய்திருந்ததால் தீடீரென ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவரது கணவர் கடந்த மார்ச் 27 அன்று அனுக்ரா நரேன் மகத் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (ANMMCH) மனைவியை அனுமதித்தார்.
அவரச பிரிவில் இருந்த அப்பெண்ணிற்கு கொரோனா அறிகுறிகள் காணப்பட்டதால், கொரோனா வைரஸ் தாக்கியிருக்குமோ என சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், ஏப்ரல் 1 ஆம் தேதி தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டார். பின்பு பரிசோதனைகளின் முடிவில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என முடிவு வரவே மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
வீடு திரும்பிய மூன்று நாட்களுக்குப் பிறகு 25 வயது மதிக்கத்தக்க அப்பெண் அதிக இரத்தப்போக்கு காரணமாக அவர் இறந்தார். இந்த சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமை அவரது மாமியார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் சில திடுக்கிடும் தகவல்களை அளித்துள்ளார் அவரது மாமியார்.
'என் மருமகள் கொரோனா வைரஸ் நோயாளிகள் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருக்கும் போது ஒரு மருத்துவர் இரண்டு நாட்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்' என கூறியுள்ளார்.
மேலும் வீடு திருப்பிய பின் அவள் எங்களோடு அவ்வளவாக பேசவில்லை, தனியாகவே இருந்தாள். மனஅழுத்தத்தில் இருந்த அவளை நாங்கள் தனியே விடவில்லை, என்ன ஆனது என்று மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தோம். அப்போது தான் அவள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் இருக்கும் போது ஒரு மருத்துவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறினாள். அதையடுத்து ஏப்ரல் 6 ஆம் தேதி, அதிக இரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்து விட்டார்' என்று கூறிள்ளார் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியார்.
இதை குறித்து விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணின் மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்து சம்பந்தப்பட்ட மருத்துவரை அடையாளம் காணும்படி கேட்டுக்கொண்டுள்ளனர் ஆனால் அதில் குற்றவாளி அடையாளம் காணப்படவில்லை.
அதற்கடுத்தபடியாக மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை பயன்படுத்தி குற்றவாளிகளை தேடிவந்துள்ளனர் போலீசார். விசாரணையில் மருத்துவமனையில் நுழைந்த இருவர் டாக்டர்கள் போல் வேடமணிந்து கொரோனா வைரஸ் தனிமை வார்டில் நுழைந்துள்ளனர் என தெரியவந்துள்ளது. இவர்களை போலீசார் கைது செய்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.