Naane Varuven M Logo Top

துர்கா பூஜை கொண்டாட்டத்தில் இருந்த பக்தர்கள்.. திடீர்னு ஆற்றில் ஏற்பட்ட மாற்றம்.. இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய வீடியோ..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

துர்கா பூஜை கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பக்தர்கள் திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் இந்தியா முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துர்கா பூஜை கொண்டாட்டத்தில் இருந்த பக்தர்கள்.. திடீர்னு ஆற்றில் ஏற்பட்ட மாற்றம்.. இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்திய வீடியோ..!

Also Read | ஊருக்கே செல்லப்பிராணியாக மாறிய ஒரு காகம்.. இதுக்கெல்லாம் காரணம் அந்த சம்பவம் தான்.. சோக பின்னணி..!

மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜைகள் எப்போதும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். நேற்றுடன் முடிவடைந்த இந்த விழாவில் துர்கா தேவி சிலைகளை அருகில் உள்ள ஆற்றில் கரைத்து வழிபாடு நடத்தினர் மக்கள். இந்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தின் ஜெயில்பைகுரி மாவட்டத்தில் உள்ள மால் ஆற்றில் நேற்று துர்கா தேவி சிலைகள் கரைக்கும் வைபவம் நடைபெற்றது. அப்போது திடீரென ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதில் சிக்கி 7 பேர் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், திடீர் வெள்ளத்தில் சிக்கி காணாமல்போனவர்களை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

several missing during Durga idols immersion in West Bengal

கனமழை

நேற்று இரவு 9.15 மணிக்கு இந்த துயர சம்பவம் நேர்ந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஜல்பைகுரி மாவட்ட மாஜிஸ்திரேட் மௌமிதா கோதாரா பாசு,"நாங்கள் 60 பேரை மீட்டுள்ளோம். அவர்களில் 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆரம்பத்தில், இரண்டு உடல்கள் மீட்கப்பட்டன. ஆனால் பின்னர் மேலும் ஐந்து உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன" என்றார். மேற்குவங்கத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவந்த நிலையில் இதன் எதிரொலியாக மால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் அறிவிப்பின்படி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் மீண்டும் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்திரபிரதேசம்

இதேபோல, உத்திரப்பிரதேச மாநிலத்தின் ஆக்ராவில் நேற்று துர்கா தேவி சிலைகள் கரைக்கும் நிகழ்வு யமுனா ஆற்றங்கரையில் நடந்தது. அப்போது ஏற்பட்ட வெள்ளத்தில் 3 பேர் அடித்துச் செல்லப்பட்டதாகவும், அதில் ஒருவருடைய உடல் மட்டும் மீட்கப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றன. மீட்புப்பணிகள் அங்கே தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

several missing during Durga idols immersion in West Bengal

ராஜஸ்தான்

ராஜஸ்தானின் அஜ்மீர் மாவட்டத்தில், துர்கா தேவி சிலையை கரைக்கும் போது மழைநீர் நிரம்பிய பள்ளத்தில் மூழ்கி ஆறு பேர் உயிரிழந்தது அம்மாநிலத்திலேயே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அஜ்மீர் காவல் கண்காணிப்பாளர் சுனா ராம் ஜாட் இதுகுறித்து பேசுகையில்,"இந்த பள்ளம் மிகவும் ஆழமானது. இங்கே இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. தண்ணீரில் மூழ்கிய அனைவரும் உயிரிழந்துவிட்டனர். அவர்களது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது" என்றார்.

 

Also Read | வெளுத்துவாங்கப்போகும் மழை.. அடுத்த 5 நாட்களுக்கு இப்படித்தான்.. 18 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வுமையம் கொடுத்த வார்னிங்..!

DURGA IDOLS, DURGA IDOLS IMMERSION, WEST BENGAL, துர்கா பூஜை, பக்தர்கள்

மற்ற செய்திகள்