பெண் 'மருத்துவரை' கொன்ற.. குற்றவாளிகளுக்கு.. சிறையில் 'மட்டன்', பருப்பு சாதம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பெண் மருத்துவர் கொலையில் சிறையில் இருக்கும் குற்றவாளிகளுக்கு சிறையில் மட்டன், பருப்பு சாதம் உணவாக வழங்கப்பட்டு இருக்கிறது.

பெண் 'மருத்துவரை' கொன்ற.. குற்றவாளிகளுக்கு.. சிறையில் 'மட்டன்', பருப்பு சாதம்!

கடந்த வாரம் ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி பாலியல் வன்கொடுமை செய்து எரித்து, கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்குத்தண்டனை வழங்க வேண்டும் என பொதுமக்களும், பிரபலங்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் சிறையில் உள்ள குற்றவாளிகளுக்கு அளிக்கப்பட்ட உணவு குறித்த விபரம் தற்போது வெளியாகி உள்ளது. அதில் சிறைக்கு சென்ற முதல்நாள் இரவு குற்றவாளிகள் யாரும் தூங்கவில்லை என்றும், மதியம் அவர்களுக்கு உணவாக பருப்பு சாதம் வழங்கப்பட்டதாகவும், இரவில் மட்டன் உணவு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. தற்போது #HyderabadPolice என்னும் ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதில் நெட்டிசன்கள் ஹைதராபாத் போலீஸ்க்கு தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.