'அடுத்த' கொரோனா 'தடுப்பூசியை' தயாரிக்கும் 'சீரம்' நிறுவனம்...! பெயர் என்ன வச்சுருக்காங்க தெரியுமா...? - ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கொரோனா வைரஸிற்கு மற்றொரு தடுப்பூசியை தயாரிக்க விரும்புவதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

'அடுத்த' கொரோனா 'தடுப்பூசியை' தயாரிக்கும் 'சீரம்' நிறுவனம்...! பெயர் என்ன வச்சுருக்காங்க தெரியுமா...? - ஆனா அதுல ஒரு சிக்கல் இருக்கு...!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் சூழலில் அனைத்து நாடுகளும், வைரஸிற்கான தடுப்புசிகளை உருவாக்கி அதனை மக்களுக்கு பரிசோதித்தும் வருகிறது.

அதில் அமெரிக்க பயன்படுத்தும் 'நோவாவக்ஸ்' என்ற கரோனா தடுப்பூசியை இந்தியாவில் 'கோவோவாக்ஸ்' என்ற பெயரில் தயாரிக்க அனுமதி கேட்டுள்ளது.

ஆனால் இதுவரை அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டுவரும் 'நோவாவக்ஸ் தடுப்பூசி'க்கு இன்னும் எந்த நாட்டிலும் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

இந்திய அரசின் மாற்றியமைக்கப்பட்ட விதிகளின்படி, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகளில் அனுமதிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் உடனடியாக அனுமதி வழங்கப்படும் என்பதால், அந்த நாடுகளில் நோவாவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படுவதை வைத்து, இந்தியாவில் உடனடியாக கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கு அனுமதி பெற சீரம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆனால் இதில் ஒரு சிக்கல் காணப்படுகிறது. அதென்னவென்றால் கோவோவாக்ஸ் தடுப்பூசிக்கான மூலப்பொருட்கள் அமெரிக்காவிலிருந்து வர வேண்டும். ஆனால், தற்போது அமெரிக்கா கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்களுக்கான ஏற்றுமதியை தடை செய்துள்ளது.

இதன்காரணமாக, தன்னிடம் இருக்கும் மூலப்பொருட்களைக் கொண்டு கோவோவாக்சை தயாரிக்க தொடங்கியுள்ள சீரம், தடுப்பூசி மூலப்பொருட்களுக்காக அமெரிக்க அரசிடம் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக சீரம் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்