'நீங்க 'ஓகே'னு ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்க... அப்புறம் பாருங்க எல்லாம் தன்னால நடக்கும்!'.. சீரம் நிறுவனம் வைத்த செக்!.. தடுப்பூசி விவகாரத்தில் அதிரடி திருப்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அமைப்பிடம் சீரம் இன்ஸ்டிட்யூட் விண்ணப்பித்துள்ளது.
கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் அதிகரிக்க தொடங்கியதை முன்னிட்டு, பல்வேறு நாடுகளில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
அந்த வகையில் ரஷியா, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக முன்னணி நாடுகள் தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியை தொடங்கினர்.
இந்நிலையில், கோவிஷீல்ட் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குமாறு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) அமைப்பிடம், இந்தியாவின் சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா விண்ணப்பித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவிஷீல்ட் தடுப்பு மருந்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா தான் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பித்து இருக்கும் முதல் இந்திய மருந்து நிறுவனம் ஆகும்.
இங்கிலாந்தின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் கூட்டாக தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு இங்கிலாந்து, பக்ரைன் ஆகிய நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
இந்த நிலையில் இந்தியாவிலும் அவசர கால பயன்பாட்டுக்கான ஒப்புதலை பைசர் நிறுவனம் நாடி உள்ளதாகவும், இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டாளருக்கு கடந்த 4-ந் தேதி விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்