‘டாக்ஸி டிரைவர்களை குறிவைத்து கொன்று’.. ‘முதலைகளுக்கு இரையாக்கிய’ சீரியல் கில்லர்... எதற்காக தெரியுமா? நடுங்கவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்தியாவில் கைது செய்யப்பட்ட கொலையாளி ஒருவர் 50க்கு மேற்பட்ட டாக்ஸி டிரைவர்களை கொன்றதுடன் அவர்களின் சடலங்களை மறைப்பதற்காக செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘டாக்ஸி டிரைவர்களை குறிவைத்து கொன்று’.. ‘முதலைகளுக்கு இரையாக்கிய’ சீரியல் கில்லர்... எதற்காக தெரியுமா? நடுங்கவைத்த சம்பவம்!

கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து 2004ஆம் ஆண்டு வரை தேவேந்திர ஷர்மா என்கிற நபர் 7 டாக்ஸி ஓட்டுநர்களை வரிசையாக கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. சுமார் 16 ஆண்டுகள் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த தேவேந்திர சர்மா குறுகிய பரோலில் அதாவது கடந்த ஜனவரி மாதம் 20 நாட்கள் பரோலில் வெளிவந்தார்.

எனினும் பரோல் முடிந்து சிறைக்கு திரும்பாமல் அவர் தலைமறைவானதால் போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தனர். பின்னர் ஆறு மாதங்கள் கழித்து தலைநகரான டெல்லியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரை விசாரித்தபோதுதான் மேலும் திடுக்கிடும் பல தகவல்கள் தெரியவந்தன. அதன்படி பாரம்பரிய மருத்துவத்தில் பட்டம் பெற்ற இவர் 1984 ஆம் ஆண்டு முதல் 11 ஆண்டுகள் ராஜஸ்தானில் இருக்கும் மருத்துவமனையில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

பின்னர் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை, பணத்துக்காக எரிவாயு சிலிண்டர்களை போலியாக விற்றது என பல மோசடி வழக்குகளில் 2004ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார். சுமார் 125 மாற்று அறுவை சிகிச்சைகளை செய்து இவர் டாலர் கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். பின்னர் உத்தர பிரதேசத்தில் ஒரு கூட்டத்துடன் சேர்ந்து இவர் தீட்டிய திட்டத்தின்படி வாடகை டாக்ஸி புக் செய்வது போன்று புக் செய்து பின்னர் டாக்ஸியை ஏதேனும் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு டாக்சி டிரைவர் கொலை செய்துவிட்டு போலீசாரிடம் சிக்காமல் டிரைவர்களின் சடலங்களை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசி விடுவார்.

பின்னர் அந்த காரின் பாகங்களை பகுதியாகவோ, காரை முழுமையாகவோ விற்று பணம் சம்பாதிக்கும் தொழிலை வழக்கமாக கொண்டுள்ளார். இப்படி ஒரு காருக்கு 250 டாலர் வரை விற்று சம்பாதித்துள்ளார். இதுவரை இவ்வாறு இவரால் 100க்கும் மேற்பட்ட டாக்சி ஓட்டுநர்கள் கொல்லப்பட்டுள்ளதாக இவர் ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் இவர் இப்போது சில கொலைகளுக்கு மட்டுமே தண்டனை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்