மனைவியுடன் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு சபரிமலை ஐயப்பன் கோவிலில் மனைவியுடன் சுவாமி தரிசனம் செய்திருக்கிறார்.

மனைவியுடன் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு..!

Also Read | சொதப்பிய மேக்கப்.. கடுப்பான கல்யாண பெண் செஞ்ச காரியம்.. பரபரப்பான கல்யாண வீடு..!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது உலக பிரசித்திபெற்ற ஐயப்பன் திருக்கோவில். கார்த்திகை மாதம் முதல் நாள் துவங்கிய உடனேயே பக்தர்கள் சபரிமலைக்கு இருந்து சாமி தரிசனம் செய்ய துவங்குவார்கள். அந்த வகையில், இந்த ஆண்டுகளுக்கான கோவில் நடை  கடந்த நவம்பர் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது. அது முதலே லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

Sekar Babu visit Sabarimalai Ayyappan Temple with his wife

ஐயப்பன் கோவிலில் வரும் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற இருக்கிறது. ஆன்லைன் முன்பதிவு அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு செய்யாத பக்தர்களுக்கு உதவும் வகையில் சபரிமலை பாதையில் 13 இடங்களில் முன்பதிவு மையங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. முன்பதிவு செய்ய விரும்பும் பக்தர்கள் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை பக்தர்கள் வைத்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற மகர விளக்கு பூஜை சபரிமலையின் பொன்னம்பலமேட்டில் வரும் ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

Sekar Babu visit Sabarimalai Ayyappan Temple with his wife

இதனை முன்னிட்டு சபரிமலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. டிசம்பர் 9 மற்றும் 12 ஆம் தேதிகளில் ஐயப்ப தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் விண்ணப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sekar Babu visit Sabarimalai Ayyappan Temple with his wife

இந்நிலையில், தமிழகத்தின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தனது மனைவியுடன் சபரிமலையில் ஐயப்ப தரிசனம் செய்திருக்கிறார். தீபாராதனை நடைபெறும் வேளையில் மனைவியுடன் அவர் வழிபாடு நடத்தியிருக்கிறார். பின்னர் தரிசனம் முடித்த அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டிருக்கிறது.

Also Read | மாண்டஸ் புயல்.. அடுத்த 24 மணிநேரம் முக்கியம்.. வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் Exclusive பேட்டி..!

KERALA, SABARIMALA, SEKAR BABU, SEKAR BABU VISIT SABARIMALAI AYYAPPAN TEMPLE, சபரிமலை

மற்ற செய்திகள்