நாளுக்குநாள் 'தீவிரமடையும்' போராட்டம்.. ஹைதராபாத்தில்.. 144 தடையுத்தரவை அமல்படுத்திய போலீஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் கடந்த வாரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இறந்துபோன பிரியங்கா ரெட்டியின் மரணத்துக்கு நீதி கேட்டு ஏராளமான பொதுமக்கள் போராடி வருகின்றனர். ஊர்வலம் செல்வது, நீதிகேட்டு பேரணி நடத்துவது, சாலைகளில் அமர்ந்து தர்ணா செய்வது உள்ளிட்ட ஏராளமான வழிகளில் மக்கள் போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் பொதுமக்களின் போராட்டங்களை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இன்று காலை (டிசம்பர் 5) 6 மணியில் இருந்து வரும் டிசம்பர் 7-ம் தேதி காலை 6 மணி வரை ஹைதராபாத்தில் 144 தடையுத்தரவை அமல்படுத்துவதாக காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து போலீஸ் கமிஷனர் அஞ்சனி குமார் கூறுகையில், ''ஹைதராபாத் நகரில் பொது அமைதியை குலைக்க சிலர் திட்டமிட்டு உள்ளதாக எங்களுக்கு நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன் அடிப்படையில் 2 நாட்களுக்கு நகரில் 144 தடையுத்தரவை அமல்படுத்தி இருக்கிறோம். இந்த நாட்களில் பேரணி, போராட்டம், தர்ணா ஆகியவற்றில் யாரும் ஈடுபடக்கூடாது. 144 தடையுத்தரவு மீறும் எவர் மீதும் காவல்துறை வழக்கு தொடரும்,'' என தெரிவித்துள்ளார்.