'இந்தியாவின் கொரோனா தடுப்பூசி'... 'எடுத்துவைத்த முதல் படி'... உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் மக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது புதிய நம்பிக்கை பிறந்துள்ளது.
உலகையே ஆட்டம் காண வைத்துள்ள கொரோனவை கண்டு உலக நாடுகள் அனைத்தும் கடும் அச்சம் அடைந்துள்ளது. இதற்கு எப்படியாவது தடுப்பூசி கண்டுபிடித்து விடமாட்டார்களா என்ற ஏக்கம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. பல நாடுகள், மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் எனத் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிப்பதில் அதிதீவிரம் காட்டி வருகிறது. இதில் சில நிறுவனங்களின் மருந்துகளின் பரிசோதனைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆனால் இதுவரை எந்த மருந்தும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை.
இந்நிலையில் இந்தியாவின் முதல் தடுப்பூசியை புனேயை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கண்டுபிடித்தது. COVAXIN என்ற இந்த தடுப்பூசிக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டுத் தலைமையகம் ஒப்புதல் அளித்தது. இதன் அடுத்த கட்டமாகத் தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்தி பரிசோதனை செய்ய ஐசிஎம்ஆர் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி இந்த மாதம் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் இந்த பரிசோதனை நடைபெற உள்ளது.
இதற்கிடையே அகமதாபாத்தில் உள்ள ‘ஸைடஸ் காடிலா’ என்ற மற்றொரு இந்திய நிறுவனம் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்துள்ளது. இதன் முதற்கட்டம் வெற்றி அடைந்த நிலையில், இந்த மருந்தை மனிதர்களுக்குச் செலுத்தி இரண்டு கட்டங்களாகப் பரிசோதனை செய்ய மருந்து கட்டுப்பாட்டு தலைமையகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்