எல்லா 'தியேட்டரையும்' இழுத்து மூடுங்க... 'அதிரடி' உத்தரவு பிறப்பித்த அரசு!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்ததை அடுத்து, தியேட்டர்களையும் மூடுமாறு கேரள அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக அண்டை மாநிலங்களான கேரளாவில் 12 பேரும், கர்நாடகாவில் 4 பேரும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரளாவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 7-ம் வகுப்பு வரை விடுமுறை அளிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பள்ளிகள், மதரசாக்கள், அங்கன்வாடிகள் ஆகியவை வருகின்ற 31-ம் தேதி வரை மூடப்பட்டு இருக்கும். 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
இதுதவிர மாநிலத்தில் உள்ள அனைத்து தியேட்டர்களையும் மூடும்படி மாநில அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது. இதுகுறித்து இன்று மதியம் கொச்சியில் மலையாள திரையுலக அமைப்பினர் நடத்திய ஆலோசனையில் வருகின்ற மார்ச் 31-ம் தேதி வரை தியேட்டர்களை மூடிட முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல கர்நாடகாவிலும் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை 1 முதல் 5-ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.