'கோடிகளில்' சம்பளம் வாங்கிய 'கேடி ஆசிரியை' கைது... நேற்று வரை 'அனாமிகா சுக்லா...' 'ஆனா, ஒரிஜினல் பேரு வேற...'

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஒரே நேரத்தில் 25 பள்ளிகளில் பணியாற்றியதாக கணக்கு காட்டி கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்ட அரசு பள்ளியை ஆசிரியை கைது செய்யப்பட்டுள்ளார்.

'கோடிகளில்' சம்பளம் வாங்கிய 'கேடி ஆசிரியை' கைது... நேற்று வரை 'அனாமிகா சுக்லா...' 'ஆனா, ஒரிஜினல் பேரு வேற...'

உத்தரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த அனாமிகா சுக்லா என்ற பெண் மாநில அரசின் கஸ்தூரிபா காந்தி பலிகா வித்யாலயா பள்ளிகளின் 25 கிளைகளில் பணியாற்றி வருவதாக அதிர்ச்சி செய்தி வெளியானது. இதன்மூலம் கடந்த 13 மாதங்களாக ஒரு கோடி ரூபாய்க்கும் மேலாக சம்பளமாக பெற்று வந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இந்நிலையில் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் அனாமிகா சுக்லாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரது உண்மையான பெயர் அனாமிகா இல்லை. ஃபருகாபாத்தை சேர்ந்த பிரியா என்று தற்போது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்மூலம் அனாமிகா சுக்லாவின் தனிப்பட்ட தகவல்களை பல்வேறு நபர்கள் முறைகேடு பயன்படுத்தி இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. இதற்கு பின்னணியில் ஒரு பெரிய கும்பலே செயல்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

போலீசார் தரப்பு கூறுகையில், சம்பந்தப்பட்ட ஆசிரியை அரசு பணியில் சேர்வதற்காக மெயின்புரியை சேர்ந்த ஒரு நபருக்கு ரூ.2.5 லட்சம் பணம் கொடுத்துள்ளார். இதையடுத்து அனாமிகா சுக்லா என்ற ஆசிரியையின் ஆவணங்களைக் கொண்டு அரசு பணியை முறைகேடாக பெற்றுள்ளார். ஆனால் அவரது உண்மையான பெயர் பிரியா. இவர் பருகாபாத் மாவட்டம் காயம்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லகான்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது.

விசாரணையின் தொடக்கத்தின் தனது பெயர் அனாமிகா சிங் என்றும், தந்தையின் பெயர் சுபாஷ் சிங் என்றும் கூறினார். ஆனால் அவரது ஆவணங்கள் அனைத்திலும் அனாமிகா சுக்லா என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தந்தை பெயர் சுபாஷ் சந்திர சுக்லா என்று இடம்பெற்றிருந்தது.

மற்ற செய்திகள்