‘+2 பொதுத்தேர்வு’ எழுதாமல் தப்பிக்க மாணவன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. லெட்டரை படித்து மிரண்டுபோன போலீசார்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து தப்பிக்க மாணவன் ஒருவன் குழந்தையை கடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘+2 பொதுத்தேர்வு’ எழுதாமல் தப்பிக்க மாணவன் போட்ட ‘மாஸ்டர்’ ப்ளான்.. லெட்டரை படித்து மிரண்டுபோன போலீசார்..!

மத்தியப் பிரதேச மாநிலம் மொரினா மாவட்டத்தில் உள்ள துடிலா கிராமத்தை சேர்ந்தவர் ரன்பீர். இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால், அதிலிருந்து தப்பிக்க உறவினர் ஒருவரின் 3 வயது குழந்தையை கடத்திச் சென்றுள்ளார். சிறிதுதூரம் சென்றபிறகு கை, கால்களை கட்டிய நிலையில் குழந்தையை அப்படியே போட்டுவிட்டு மாணவன் தப்பியுள்ளான்.

இதற்கிடையே அருகில் படுத்துக்கிடந்த குழந்தை காணாமல் போனதைப் பார்த்து தாய் அதிர்ச்சியடைந்துள்ளார்.  பல இடங்களில் தேடியும் குழந்தை கிடைக்காததால் அவர் போலீஸ் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரன்பீரின் வீட்டில் இருந்து கடிதம் ஒன்று போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், குறிப்பிட்ட பகுதியில் குழந்தையை தேடி ரன்பீர் வரவேண்டும், அவன் தேர்வு எழுத செல்லக்கூடாது என எழுதப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து கடிதத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அங்கு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிடந்த குழந்தையை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாணவன் ரன்பீரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் இருந்து தப்பிக்க குழந்தையை கடத்தி பெற்றோரை திசை திருப்ப முயன்றதாக மாணவன் தெரிவித்துள்ளான். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCHOOLSTUDENT, CLASS12EXAMS, KIDNAPPED, MADHYAPRADESH, 12THEXAM