VIDEO: சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஸ்கூல் பஸ் டிரைவரை நிர்வாணமாக்கி புரட்டி எடுத்த மக்கள்..!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அமரவாதி அருகே பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற ஸ்கூல் வேன் டிரைவரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

VIDEO: சுடுகாட்டுக்கு தூக்கிச்சென்று பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை.. ஸ்கூல் பஸ் டிரைவரை நிர்வாணமாக்கி புரட்டி எடுத்த மக்கள்..!

ஆந்திர மாநிலம் அமராவதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சிவா என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனியாக நின்றுகொண்டிருந்த 8ம் வகுப்பு மாணவி ஒருவரை சிவா சுடுகாட்டிற்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள முட்புதரில் தள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

அப்போது சிறுமியின் கூச்சல் சத்தம்கேட்டு பொதுமக்கள் அப்பகுதிக்கு வந்துள்ளனர். பின்னர் சிவாவிடமிருந்து சிறுமியை மீட்டு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஆத்திரத்தில் பள்ளி வேனை தீயிட்டு எரித்தனர். மேலும் வேன் டிரைவரை நிர்வாணமாக சாலையில் இழுத்து சென்றனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வேன் டிரைவர் சிவாவை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SEXUALABUSE, SCHOOLSTUDENT, ANDHRAPRADESH, DRIVER