இந்தியாவோட 'ஜனாதிபதி' யாரு?... அவருகிட்ட பதிலேயே 'காணோம்'... ஸ்டேட் 'ஃபர்ஸ்ட்' டீச்சருக்கு வந்த சோதனை!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச மாநிலத்தில் சமீபத்தில் காலியாக உள்ள 69 ஆயிரம் ஆசிரியர் பணிக்கு தேர்வுகள் நடைபெற்றுள்ளன. இந்த தேர்வில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளதாக அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த ஆசிரியர் தேர்வில் முதலிடம் பிடித்தவருக்கு நாட்டின் ஜனாதிபதி பெயர் கூட தெரியவில்லை. அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் பலரிடமிருந்து லட்சக்கணக்கில் பணம் வசூல் செய்ததாக புகார் எழுந்த நிலையில் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட பணி நியமனத்தை ஐகோர்ட் ரத்து செய்தது. உதவி ஆசிரியர்களின் 37,339 பதவிகளை காலியாக வைக்குமாறு சுப்ரீம் கோர்ட் செவ்வாய்க்கிழமை அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், அம்மாநில அரசு, ஆசிரியர்கள் ஆள் சேர்ப்பு முறைகேடு குறித்து சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கு குறித்து விசாரித்த காவல் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இந்த வழக்கில் தொடர்புடைய 10 பேரை கைது செய்துள்ளோம். அவர்களில் 95 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடம் பிடித்த தர்மேந்திர படேல் என்பவரிடம் விசாரணை நடத்தினோம். அவரிடம் பொது அறிவு குறித்த அடிப்படை கேள்விகளுக்கு கூட பதில் இல்லை. இந்தியாவின் ஜனாதிபதி யார் என்று கேட்டால் கூட தெரியவில்லை' என தெரிவித்தார்.
இந்த வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரான கே.எல். படேல் என்பவரிடம் இருந்து 22 லட்ச ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. முன்னதாக விண்ணப்பதாரர்களில் ஒருவர் ஆட்சேர்ப்புக்காக லஞ்சம் வாங்கப்படுவதாக அளித்த புகாரின் பெயரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
TRENDING NEWS
மற்ற செய்திகள்
LATEST VIDEOS