"வொர்க் ஃப்ரம் ஹோம் கேள்விப்பட்ருப்பீங்க!".. 'இது வேற லெவல்!'.. இந்திய ஊழியர்களுக்கும் அடித்த ஜாக்பாட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

வெளிநாடுகளைப் பொருத்தவரை, 19 அலுவலகங்களில் எங்கிருந்து வேண்டுமானாலும் வங்கிக் கொள்கைகளின்படி ஊழியர்கள் பணிபுரிவதற்கான வாய்ப்புகளை எஸ்பிஐ வழங்கவுள்ளது. 

"வொர்க் ஃப்ரம் ஹோம் கேள்விப்பட்ருப்பீங்க!".. 'இது வேற லெவல்!'.. இந்திய ஊழியர்களுக்கும் அடித்த ஜாக்பாட்!

பொதுத்துறை வங்கிகளில் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணிபுரியச் சொல்லியுள்ள முதல் பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கிதான் என்கிற நிலையில், நாடு முழுவதும் உள்ள 2.5 லட்சம் ஊழியர்கள், எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரிவதற்கு அனுமதி வழங்கப்படவிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் வந்து உலகையே ஆட்டிப்படைக்கும் சூழலில், வேலையும் நடக்க வேண்டும், அதே சமயம் நோய்த்தொற்றில்லாத பாதுகாப்பான வாழ்க்கை முறையை மேற்கொள்ளும் விதமாகவும், ஊழியர்களின் மனநிலையை கருத்தில்கொண்டும் இத்தகைய முடிவினை எஸ்பிஐ எடுத்துள்ளதும், இதனால் இதுவரை Work From Home(WFH) மட்டுமே இருந்த நிலையில், இப்போது Work From Anywhere (WFA) பிரபலமாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதேபோல் எச்.டி.எப்.சி வங்கி நிறுவனமும், தமது மூன்றாம் நிலை ஊழியர்களுக்கு இத்தகைய அறிவிப்பினை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்