'இவரா வாதாட வராரு, இனி கேஸ் என்ன ஆகுமோ'... 'அதிர்ந்துபோன அதிகாரிகள்'...'ஷாருக்கான் மகனுக்காக களமிறங்கும் வக்கீல்'... ஒரு நாள் பீஸ் மட்டுமே இவ்வளவா?

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் வழக்கில் ஆஜராகப் போகும் வழக்கறிஞர் குறித்து பல்வேறு சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

'இவரா வாதாட வராரு, இனி கேஸ் என்ன ஆகுமோ'... 'அதிர்ந்துபோன அதிகாரிகள்'...'ஷாருக்கான் மகனுக்காக களமிறங்கும் வக்கீல்'... ஒரு நாள் பீஸ் மட்டுமே இவ்வளவா?

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான். இவரது மகன் ஆர்யன் கான் சமீபத்தில் மும்பையில் உள்ள சொகுசு கப்பலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருளைப் பயன்படுத்தியதாகப் போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையால் கைது செய்யப்பட்டார். 23 வயதான ஆர்யன் கான், ஷாருக்கானின் மகன் என்பதால் இந்த வழக்கு இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Satish Maneshinde is representing Aryan Khan in the Narcotics Case

இந்நிலையில் இந்த வழக்கில் ஆர்யன் கான் சார்பில் வழக்கறிஞர் சதீஷ் மானேஷின்டே என்பவர் ஆஜராக உள்ளார். ஆர்யன் கானுக்காக இவர் ஆஜராகப் போகிறார் எனத் தெரிந்ததும் இந்த வழக்கு தற்போது சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. சதீஷ் மானேஷின்டே ஆஜராகப் போகிறார் எனத் தெரிந்ததும் அதிகாரிகள் பலரும் பரபரப்படைய ஆரம்பித்துள்ளார்கள்.

யார் இந்த சதீஷ் மானேஷின்டே அவரது பின்னணி என்ன, அவர் இதற்கு முன்னர் யாருக்காக எல்லாம் ஆஜராகி உள்ளார் என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம். கர்நாடக மாநிலம் தார்வாத் பகுதியில் பிறந்த சதீஷ் மானேஷின்டே, மும்பையில் சட்டம் பயின்றவர். பின்னர் கடந்த 1983களில் இவர் இந்தியாவின் பிரபலமான வக்கீலான ராம் ஜெத்மெலானியிடம் ஜூனியராக பணியாற்றினார்.

Satish Maneshinde is representing Aryan Khan in the Narcotics Case

10 ஆண்டுகள் ராம் ஜெத்மெலானியியோடு பயணித்த சதீஷ் மானேஷின்டே, அவரின் சட்ட நுணுக்கங்கள், வழக்கைக் கையாளும் விதம் என அனைத்திலும் தேர்ச்சி பெற்றார். பின்னர் தனியாக வழக்கறிஞராகத் தனது பணியைத் தொடங்கிய சதீஷ் மானேஷின்டே, பல முக்கிய அரசியல் தலைவர்கள், நடிகர்கள், மற்றும் பல பிரபலங்களின் வழக்குகளை வெற்றிகரமாகக் கையாண்டு, இந்தியாவின் பிரபலமான கிரிமினல் வக்கீல் என்ற அந்தஸ்தை சதீஷ் மானேஷின்டே பெற்றார்.

இதனால் பாலிவுட்டின் முக்கிய புள்ளி என்ற நிலைக்கு சதீஷ் மானேஷின்டேஉயர்ந்தார். குறிப்பாக 1993ம் ஆண்டு மும்பை வெடிகுண்டு வழக்கில் சிக்கிய சஞ்சய் தத்திற்கு இவர் தான் வக்கீலாக செயல்பட்டார். அவருக்கு ஜாமீனும் பெற்றுக்கொடுத்தார்.

Satish Maneshinde is representing Aryan Khan in the Narcotics Case

சஞ்சய் தத் 2007ம் ஆண்டு சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்தாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு ஆதரவாக பணியாற்றிய வக்கீல் குழுவில் இவரும் இருந்தார். சஞ்சய் தத்திடம் இருந்த செல்வாக்கு மூலம், சல்மான்கானுக்காக ஆஜராகி அவர் குடிபோதையில் வாகனம் ஓட்டி ஒருவர் இறந்த வழக்கில் சல்மான்கானுக்கு ஆஜராகி அவருக்கு ஜாமீனும் பெற்றுத் தந்தார்.

சதீஷ் மானேஷின்டேவை சாதாரணமானவர்கள் அவ்வளவு எளிதில் அணுக முடியாது. காரணம் அவர் வாங்கும் பீஸ் தான். இந்தியாவின் மிகப்பெரிய கிரிமினல் வக்கீலாக இருக்கும் சதீஷ் மானேஷின்டே, பல முக்கியமான பிரபலங்களுக்கு நம்பிக்கைக்குரிய வக்கீலாகவும் உள்ளார். இதனால் ஒரு முறை ஆஜராவதற்கு ரூ10 லட்சம் வரை வசூலிப்பதாகக் கூறப்படுகிறது.

Satish Maneshinde is representing Aryan Khan in the Narcotics Case

சதீஷ் மானேஷின்டேவை அணுகுபவர்கள் சமூகத்தில் முக்கிய புள்ளியாக இருப்பதால், அவர்களுக்கு இந்த பீஸ் ஒரு பெரிய கஷ்டமாக இருக்கப் போவதில்லை. முக்கிய பிரபலங்களுக்கு வழக்கறிஞராக மட்டும் இல்லாமல், பிரபலமான மற்றும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பல வழக்குகளை இவர் கையாண்டுள்ளார்.

Satish Maneshinde is representing Aryan Khan in the Narcotics Case

குறிப்பாக மும்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயா நாயக் வழக்கு, புக்கீ சோபன் மேத்தா வழக்கு, சோட்டா ராஜனின் மனைவி சுஜாத்தா நிக்கல்ஜின் ஒருங்கிணைக்கப்பட்ட குற்ற வழக்கு, ராக்கு சாவத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு எனப் பல முக்கிய வழக்குகளைக் கையாண்டுள்ள சதீஷ் மானேஷின்டே, மீண்டும் இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போதைப் பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகனுக்காக ஆஜராக உள்ளதால், இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும் எனச் சட்ட வல்லுநர்கள் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்