‘இந்த தேர்தல் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?’.. சச்சினின் வைரல் ட்வீட்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்குப்பதிவு செய்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘இந்த தேர்தல் ரொம்பவே ஸ்பெஷல்.. ஏன் தெரியுமா?’.. சச்சினின் வைரல் ட்வீட்!

நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்துவரும் நிலையில், வட இந்தியாவில் 9 மாநிலங்களில் உள்ள 71 மக்களவைத் தொகுதிகளில் 4-ஆம் கட்ட தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.  இதில் மகாராஷ்ட்ராவில் 17 தொகுதிகளிலும், உத்தரப்பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் தலா 13 தொகுதிகளிலும், மேற்கு வங்கம், மத்தியப்பிரதேசம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் 10க்கும் குறைவான தொகுதிகளிலும், வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விறுவிறுவென வாக்குப்பதிவுகள் நடந்து வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் சென்று வாக்களித்ததோடு, விரல்களில் வாக்குப்பதிவு செய்த மைக்கறையை காண்பித்து புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தும் வருகின்றனர்.

இந்த சூழலில், மும்பையில் உள்ள பாந்த்ரா எனும் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு ரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் மகன் அர்ஜூன் உள்ளிட்ட தனது குடும்பத்தினருடன் சென்று வாக்களித்தார். இதுபற்றி தனது ட்விட்டரில் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், தனது மகள் சாரா மற்றும் தனது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இருவரும் முதல் முறையாக ஓட்டு போட்டதால், இந்த நாடாளுமன்றத் தேர்தல் தனக்கு ஸ்பெஷலானது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அனைவரும் சென்று ஓட்டு போடுங்கள் என்று பொதுமக்களுக்கும் வலியுறுத்தியுள்ளார். தனது ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு, அந்த மைக்கறை விரலுடன் நின்று குடும்பத்துடன் போஸ் கொடுத்த சச்சினின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LOKSABHAELECTIONS2019, ELECTIONS, SACHINTENDULKAR