ஜி... ஒரு நிமிஷம் நில்லுங்க...! அவங்க 'யாரா' வேணா இருக்கட்டும்...! 'இது என்னோட கடமை...' - CISF எடுத்த 'மாஸ்' முடிவு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டைகர்-3 படத்தின் படப்பிடிப்பிற்கு ரஷ்யா செல்வதற்காக நடிகர் சல்மான் கான் மும்பை விமான நிலையம் வந்தார்.

ஜி... ஒரு நிமிஷம் நில்லுங்க...! அவங்க 'யாரா' வேணா இருக்கட்டும்...! 'இது என்னோட கடமை...' - CISF எடுத்த 'மாஸ்' முடிவு...!

அப்போது, பாதுகாப்பு சோதனை செய்யப்படும் பகுதிக்கு செல்லாமல், அடுத்த பகுதிக்கு செல்ல முயன்ற சல்மான் கானை பணியில் இருந்த CISF  பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தினார்.

யாராக இருந்தாலும் பாதுகாப்பு பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்றுக் கூறி அவர் தனது கடமையை சரியாக செய்தார்.

சல்மான் கானை தடுத்து நிறுத்தி தன் கடமையை செய்த பாதுகாப்பு அதிகாரிக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுகள் வந்து குவிந்தன.

பாதுகாப்பு அதிகாரி தடுத்த பின் சல்மான் கான் முறையான பாதுகாப்பு சோதனைக்கு செய்து கொண்ட பிறகு தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.

இதுகுறித்து CISF கூறுகையில், 'மும்பை விமான நிலையத்தில் நடிகர் சல்மான் கானை தடுத்து நிறுத்தி, பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறு கூறிய CISF அதிகாரி மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், யாராக இருந்தாலும் கடமையை சரியாக செய்த அவருக்கு வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது.' என்று கூறியுள்ளது.

மற்ற செய்திகள்