ஒரு வாரமாய்.. தண்ணீர் டிரம்மில் கிடந்த கணவரின் உடல்.. அதிர வைத்த மனைவியின் வாக்குமூலம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாகிட்டத்தட்ட ஒரு வாரமாக, தண்ணீர் டிரம்மில் கணவரின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ள நிலையில், இதுபற்றி விசாரித்த போலீசாருக்கு, அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார் மனைவி.
சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையம் பகுதியிலுள்ள எஸ்.எம்.சி காலனியைச் சேர்ந்தவர் சேதுபதி (வயது 33). கூலி தொழிலாளியான இவரது மனைவியின் பெயர் பிரியா (வயது 30). இந்த தம்பதியருக்கு 7 வயதில் ஒரு மகளும், 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.
இதில், கணவர் சேதுபதிக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தெரிகிறது. தினமும் குடித்து விட்டு, வீட்டுக்கு வரும் சேதுபதி, மனைவி பிரியாவிடம் தினமும் தகராறு செய்து வந்துள்ளார். இருவரும் மாறி மாறி, தினமும் சண்டை போட்டும் வந்துள்ளனர். இதனிடையே, நேற்றிரவு சேதுபதியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பெயரில் அங்கு வந்த போலீசார், சேதுபதியின் வீட்டில் வந்து சோதனையிட்டனர்.
பிளாஸ்டிக் டிரம்மில் உடல்
அப்போது, அங்கிருந்த தண்ணீர் நிரப்பும் பிளாஸ்டிக் டிரம் ஒன்றில் அழுகிய நிலையில் சேதுபதி உடல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார், பிரியாவிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டனர். இதில், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளார் பிரியா. தொடர்ந்து, சந்தேகத்தின் பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணையை மேற்கொண்டனர். அப்போது, பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியானது.
கள்ளக்காதல் விவகாரம்
கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு, சேதுபதியும், பிரியாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கூலி வேலை செய்து வரும் சேதுபதி, தனது பணி நிமித்தம் காரணமாக அடிக்கடி வெளியூர் சென்று வருவார். அது மட்டுமில்லாமல், மது பழக்கமும் அவருக்கு அதிகம் இருந்ததால்,கடந்த சில மாதங்களாக, சம்பாதிக்கும் பணத்தை வீட்டிற்கு கொடுக்காமல், மது அருந்தி வந்தது தெரிய வந்தது. இதன் பெயரில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இடையூறு
இதனிடையே, பிரியாவிற்கும் அப்பகுதியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயம் சேதுபதிக்கு தெரிய வந்ததையடுத்து அவரும் கண்டித்துள்ளார். ஆனால், பிரியா இதனைக் கேட்கவில்லை என தெரிகிறது. மேலும், தங்களது கள்ளக் காதலுக்கும், சேதுபதி இடையூறாக இருந்து வந்துள்ளார். இதனால், அவரைக் கடந்த வெள்ளிக்கிழமை சதீஸுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார் பிரியா. அதன் பிறகு, பிளாஸ்டிக் டிரம்மில் பிரியாவும் சதீசும் சேர்ந்து உடலை அடைத்து வைத்துள்ளனர். நேற்று இரவு, அவரது உடலை எடுத்து வெளியே செல்ல முயன்ற போது தான், ஊர் மக்கள் கவனித்து சந்தேகத்தின் பெயரில், போலீசாரிடம் தெரிவித்தனர்.
அதிர்ச்சி சம்பவம்
தொடர்ந்து, பிரியாவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உண்மை தெரிய வந்தது. பிரியா கொடுத்த தகவலின் அடிப்படையில், சதீஷ் குமாரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும், போலீசார் தொடர்ந்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்காதலின் பெயரில், கணவரைக் கொன்று ஒரு வாரமாக தண்ணீர் டிரம்மில் பெண் ஒருவர் வைத்திருந்த சம்பவம், அப்பகுதியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்