Work from home.. வேலை செய்றவங்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

நிரந்திரமாக வீட்டில் இருந்தே பணியாற்ற விரும்பும் பணியாளர்களுக்கு சம்பள கட்டுமானத்தில் சில மாறுதல்களைக் கொண்டு வர மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Work from home.. வேலை செய்றவங்களுக்கு மத்திய அரசு கொடுத்த ஷாக்

நிரந்தர Work From Home கேட்கும் பணியாளர்களுக்கு ஊதியத்தில் மாறுதல்கள் செய்ய நிறுவனங்களுக்கு அனுமதி தரும் முடிவில் இருக்கிறது மத்திய தொழிலாளர் அமைச்சகம். வீட்டு வாடகை அலவன்ஸ் போன்றவற்றை க்ளைம் செய்து கொள்ளும் வசதிகள் இனி வரும் காலங்களில் குறையும் எனத் தெரிகிறது. இதுதொடர்பான மாற்றங்களே விரைவில் மத்திய அமைச்சகத்தால் அமல் செய்யப்படுகிறது.

salary structure may undergo a change for WFH employees

அதேபோல், வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால் பணியாளர் ஒருவரும் ஏற்படும் கூடுதல் செலவுகளை எப்படி சரிக்கட்டுவது என்பது தொடர்பான மாறுதல் உத்தரவுகளும் நிறுவனங்களுக்குப் பிறப்பிக்கப்பட உள்ளது. ஆக, மத்திய தொழிலாளர் அமைச்சகம், பணியாளர் மற்றும் நிறுவனம் சார்ந்து இரு தரப்புகளையும் யோசித்துப் பலன் அளிக்கும் வகையிலான ஒரு முடிவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காரணம், வீட்டில் இருந்து பணியாற்றுவதால் பணியாளர்களுக்கு கட்டுமான செலவுகள், மின்சாரம், இணைய சேவை என நிறுவனம் ஈடுகட்டுவதற்கான செலவுகள் அதிகம் இருக்கின்றன. அதேபோல், வீட்டில் இருந்து பணியாற்றலாம் என்பதால் பலரும் முக்கிய மெட்ரோ நகரங்களை விட்டு வெளியேறி இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் சென்று வசிக்கத் தொடங்கி உள்ளனர். இதனால் வாழ்வாதார செலவுகள் பணியாளர்களுக்குக் குறையும் என்பதையும் பணி அமர்த்தும் நிறுவனங்கள் கணக்கில் எடுத்துக்கொள்வார்கள்.

salary structure may undergo a change for WFH employees

இதனால், நிச்சயமாக இந்த க்ளைம் செய்யப்படும் பணம், அலவன்ஸ் பணம், ப்ரொஃபெஷனல் வரி உள்ளிட்டவைகளில் மாறுதல்கள் ஏற்படும். வரிச்சுமை நிச்சயமாகப் பணியாளர்களுக்குக் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அடிப்படை ஊதியம் எப்படிக் கட்டமைக்கப்படப் போகிறது என்பதே அனைவரும் காத்திருக்க வேண்டிய தகவல் ஆக இருக்கும்.

MONEY, WORKFROMHOME, BASIC SALARY, HRA TAX

மற்ற செய்திகள்