‘ஐப்பசி மாத பூஜைக்காக’ சபரிமலை நடை திறப்பு.. ‘முக்கிய’ விதிமுறையும் ‘முக்கிய’ தடையும்! முழு விபரம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சபரிமலை அய்யப்பன் கோவில் ஐப்பசி மாத பூஜைக்காக நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார்.

‘ஐப்பசி மாத பூஜைக்காக’ சபரிமலை நடை திறப்பு.. ‘முக்கிய’ விதிமுறையும் ‘முக்கிய’ தடையும்! முழு விபரம்!

வருகிற 21 -ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்த பூஜைக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களில் தினமும் 250 பேர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும், தரிசனத்திற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பெறப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழை அளிக்க வேண்டும். அத்துடன் நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்படும். குறிப்பாக பம்பையில் பக்தர்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் பக்தர்கள் குளிப்பதற்கு தனி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

17-ந் தேதி காலை 9 மணிக்கு சன்னிதானத்தில் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் நடைபெறும்.  இதேபோல், அடுத்த மாதம் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு  மண்டல, மகரவிளக்கு சீசனையொட்டி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும்.  டிசம்பர் 26 - ந் தேதி மண்டல பூஜையும்,  2021-ம் ஆண்டு ஜனவரி 14-ந் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்