ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-V' தடுப்பூசி இந்தியா வந்தாச்சு...! இந்தியால மொதல்ல எங்க வச்சு சோதனை...? - 180 பேர வச்சு டெஸ்ட்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ரஷ்யா தனது ஸ்புட்னிக்-V தடுப்பூசியை ஆகஸ்ட் மாதமே பதிவு செய்து, உலகிலேயே முதல்முறையாக பதிவுசெய்யப்பட்ட கோவிட்-19 தடுப்பூசி ஸ்புட்னிக்-V தடுப்பூசி ஆகும்.

ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-V' தடுப்பூசி இந்தியா வந்தாச்சு...! இந்தியால மொதல்ல எங்க வச்சு சோதனை...? - 180 பேர வச்சு டெஸ்ட்...!

இருந்தபோதிலும், தடுப்பூசி மீது முழுமையான நம்பிக்கை வராததால் உலக ஆய்வாளர்கள் பலர் சந்தேகம் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், ஸ்புட்னிக்-V தடுப்பூசி கொரோனாவில் இருந்து மக்களை காப்பதில் 92 சதவீதம் திறனுடன் இருப்பதாக தெரிவித்த ரஷ்யா, இறுதிக்கட்ட மருத்துவப் பரிசோதனையில் ஈடுபட போகும்16,000 பேரையும் சேர்த்து மொத்தமாக 40,000 பேரை உட்படுத்தப்பட்டதாக தெரிவித்தது.

இந்த நிலையில், ரஷ்யாவின் ஸ்புட்னிக் கொரோனா தடுப்பு மருந்து இரண்டு மற்றும்  மூன்றாம் கட்ட மனித சோதனைகளுக்காக அடுத்த வாரம் இந்தியாவில் கான்பூருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. இந்த தடுப்பூசி பரிசோதனைக்காக 180 பேர் பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக, ஹைதராபாத்திலுள்ள டாக்டர்.ரெட்டிஸ் ஆய்வகத்திற்கு ஸ்புட்னிக் தடுப்பூசிகள் வந்து சேர்ந்தன. அவைகள் மீதும் சோதனைகள் நடத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்