ஆத்தாடியோவ்! 'நிமிஷத்துக்கு' ₹ 11 ஆயிரம்... ஒரு மணி நேரத்திற்கு ₹ 6.75 லட்சம்... நாளொன்றுக்கு ₹ 1.62 கோடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்புக்கு நாளொன்றுக்கு செலவு செய்யப்படும் தொகை குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

ஆத்தாடியோவ்! 'நிமிஷத்துக்கு' ₹ 11 ஆயிரம்... ஒரு மணி நேரத்திற்கு ₹ 6.75 லட்சம்... நாளொன்றுக்கு ₹ 1.62 கோடி!

தற்போது இந்தியாவில் நரேந்திர மோடிக்கு மட்டுமே சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்பு செலவுக்கு எவ்வளவு தொகை செலவு செய்யப்படுகிறது? என இன்று மக்களவையில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் கிஷண் ரெட்டி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அப்போது அவர் பிரதமருக்கு மட்டுமே இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், சிஆா்பிஎஃப் படையினரின் பாதுகாப்பில் 56 முக்கிய பிரமுகா்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பிரதமரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் 3 ஆயிரம் வீரர்கள் கொண்ட எஸ்.பி.ஜி-க்கு (சிறப்பு பாதுகாப்புப் படை) ரூ. 592.55 கோடியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒதுக்கி உள்ளார். கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இது 10% அதிகம் ஆகும்.கடந்தாண்டு பட்ஜெட்டில் ரூ. 540.16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. எனினும், அப்போது பிரதமர் மோடி, சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என நால்வர் எஸ்.பி.ஜி பாதுகாப்பு பிரிவில் இருந்தனர்.

சமீபத்தில் சோனியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினருக்கு எஸ்.பி.ஜி பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில், பிரதமர் மோடி மட்டுமே எஸ்.பி.ஜி பிரிவில் உள்ளார். சமீபத்திய பட்ஜெட்டில் எஸ்.பி.ஜி.க்கு ஒதுக்கப்பட்டுள்ள ரூ.592.55 கோடி அடிப்படையில் பார்த்தால், பிரதமரின் பாதுகாப்புக்கு ஒரு நாளைக்கு ரூ.1.62 கோடி செலவிடப்படுகிறது. ஒரு மணி நேரத்திற்கு ரூ.6.75 லட்சமும், ஒரு நிமிடத்திற்கு ரூ.11, 263 செலவிடப்படுகிறது.