“ரெட் லைட் ஏரியாவுக்கு போகமறுத்த கேப் டிரைவர்!”.. “காவலரால் நேர்ந்த கொடூரம்!”.. இந்தியாவை உலுக்கிய இன்னொரு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை சத்ரபதி சிவாஜி பேருந்து நிலையம் அருகே டாக்ஸி டிரைவர் சவாரிக்காக காத்திருந்துள்ளர்.
அப்போது அங்கு போதையில் வந்த அமித் தங்கத் என்கிற ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் தெற்கு மும்பையின் கிராண்ட் சாலையில், பாலியல் தொழில்கள் நடக்கக் கூடிய ரெட் லைட் ஏரியாவுக்கு அழைத்துப் போகச் சொல்லி கூறியுள்ளார்.
ஆனால் ரெட் லைட் ஏரியாவுக்கு என்றால் வரமுடியாது என்று மறுத்துள்ளார் அந்த டாக்ஸி டிரைவர். அப்படியானால் ‘நீ வா’ என்று அந்த டாக்ஸி டிரைவரை அடித்து தனியாக இழுத்துச் சென்ற ரயில்வே போலீஸ் கான்ஸ்டபிள் தங்கத், அங்கு வைத்து டாக்ஸி டிரைவரை பாலியல் பலவந்தத்துக்கு உள்ளாக்கியதோடு, டிரைவரிடம் இருந்த பணம் மற்றும் டாக்ஸி சாவி உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்றுள்ளார்.
அங்கிருந்து தப்பிவந்த டாக்ஸி டிரைவர் கொடுத்த புகாரின் பேரில், அமித் தங்கத் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதோடு, அவருடைய பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.