‘நெஞ்சுல பாலை வார்த்தீங்க!’.. ‘கொரோனா’ அடிச்ச ‘அடியில்’ இருந்து ‘மீண்டு விடுவோம்’ எனும் ‘நம்பிக்கை’ தரும் ஐடி, வணிக நிறுவனங்களின் அதிரடி ‘முடிவுகள்!’
முகப்பு > செய்திகள் > இந்தியாகோவிட்-19 பெருந்தொற்று காலத்தில், அதிலும் குறிப்பாக லாக்டவுன் அறிவித்த பின்னரான காலப்பகுதியில் மில்லியன் கணக்கான வேலை இழப்புகள் மற்றும் துறைகளில் ஆழ்ந்த சம்பள வெட்டுக்கள் காணப்பட்டன. இந்நிலையில் கொரோனா தொற்றால் உண்டான பொருளாதார மந்தநிலை காரணமாக 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட சம்பள வெட்டுக்களை இந்தியாவில் பல நிறுவனங்கள் திரும்ப பெறுகின்றன.
அதுவும் தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கள் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் இப்படி சம்பள வெட்டுக்கள் திரும்பப் பெறப்படுவது பல மாதங்களில் அதிகரித்த நிதிப் பற்றாக்குறையை எதிர்கொண்ட ஊழியர்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக அமைகிறது. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான பில்லியனர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) ஹைட்ரோகார்பன்கள் பிரிவின் ஊழியர்களுக்கான சம்பள வெட்டுக்களை திரும்பப் பெறுகிறது.
இதேபோல் ஆயில்-டு-டெலிகாம் நிறுவனம் அடுத்த ஆண்டு சம்பளத்திலிருந்து மாறி ஊதியத்தில் 30 சதவீதத்தை முன்கூட்டியே அதன் லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு தொற்றுநோய்களின் போது அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டும் வகையில் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில், ரிலையன்ஸ் தனது ஹைட்ரோகார்பன் பிரிவின் ஊழியர்களின் சம்பளத்தை 10 சதவீதம் குறைத்து 50 சதவீதமாகக் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
தவிர பண்டிகை காலங்களில் முன்னர் அறிவிக்கப்பட்ட சம்பள வெட்டுக்களை ரிலையன்ஸ் மட்டுமல்லாமல் பல நிறுவனங்களும் திரும்பப் பெறுகின்றன என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது. அக்டோபர் 23 முதல் கடந்த மூன்று வாரங்களில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டி.சி.எஸ்), இன்போசிஸ், விப்ரோ, எச்.சி.எல் மற்றும் மைண்ட்ட்ரீ போன்ற பல சிறந்த தொழில்நுட்ப நிறுவனங்களும் பண்டிகை காலங்களில் புதிய சம்பள உயர்வுகளையும் போனஸையும் வெளியிடுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளதாக அந்த செய்திக்குறிப்பில் இருந்துதெரியவருகிறது.
மற்ற செய்திகள்