கொரோனாவால் இறந்தவர் மூலம் நோய் தொற்று ஏற்படுமா..? ஓராண்டு நடந்த ஆய்வு.. எம்ய்ஸ் புதிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலில் இருந்து மற்றவர்களுக்கு தொற்று பரவுவது தொடர்பாக எம்ய்ஸ் ஆய்வு நடத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் இறந்த ஒருவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதா என்பது தொடர்பாக இதுவரை எந்த ஆதாரபூர்வமான தகவலும் இல்லை என்ற நிலை நிலவி வந்தது. இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு மேற்கொண்டது.
இதுகுறித்து தெரிவித்த டெல்லி எம்ய்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறைத்தலைவர் டாக்டர் சுதீர் குப்தா, ‘கடந்த ஒரு ஆண்டாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தடயவியல் துறை சார்பில், கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை வைத்து ஒரு ஆய்வு நடத்தி வந்தோம். கிட்டத்தட்ட 100 உடல்களை கொரோனா வைரஸ் தொற்று இருக்கிறதா என்பதை மறு ஆய்வு செய்தோம். உயிர் பிரிந்த 12 முதல் 24 மணி நேரத்தில் இந்த பரிசோதனையை மேற்கொண்டோம்.
இறந்து 24 மணிநேரத்திற்கு பின்னர் ஒருவரது உடலில் குறிப்பாக மூக்கு மற்றும் வாய் குழிகளில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. அதனால் ஒருவர் இறந்து 12 முதல் 24 மணி நேரமான பின்னர், அவரது உடல் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவுவதற்கு பெரும்பாலும் வாய்ப்பு இல்லை.
கொரோனாவால் ஒருவர் இறந்த பின்னர். உடல் திரவங்கள் மற்றும் பிற கசிவுகளைத் தடுக்கிற பாதுகாப்பு நோக்கங்களுக்காக மூக்கு, வாய் குழிகள் மூடப்பட்டு விடவேண்டும். இப்படி கொரோனாவால் இறந்தவர்கள் உடல்களைக் கையாள்கிறவர்கள் கண்டிப்பாக பாதுகாப்பு கவச உடைகள், முக கவசம், கையுறைகள் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்’ என டாக்டர் சுதீர் குப்தா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வு, இறந்தவர்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகதான் நடத்தியாக எம்ய்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்