பெங்களூவில் மசால் தோசை சாப்பிடும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.. வைரலாகும் புகைப்படம்.. !
முகப்பு > செய்திகள் > இந்தியாபெங்களூருவில் உள்ள பிரபல உணவகத்தில் ரிஷி சுனக் உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகியுள்ளது.
Also Read | "ரிஷி சுனக் Kidnap.. நெஹ்ராவ அனுப்பிடலாம்".. பிரபல தொழிலதிபரின் நண்பர் போட்ட 'ஜாலி' பிளான்??..😀
இங்கிலாந்தின் பிரதமராக பதவியேற்றிருக்கிறார் இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான ரிஷி சுனக். இந்நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவரும் நிலையில், இணையவாசிகள் அவருடைய பழைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர்.
ரிஷி சுனக்
இங்கிலாந்து நாட்டின் சவுத்தாம்டன் பகுதியில் பிறந்த ரிஷி சுனக், வின்செஸ்டர் கல்வி நிறுவனத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார். அதனை தொடர்ந்து ஆக்ஸ்போர்டு மற்றும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றார். முன்னணி தொழிலதிபரான நாராயண மூர்த்தியின் மகளான அக்சதா மூர்த்தியை 2009ஆம் ஆண்டில் திருமணம் செய்தார். இருவரும் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படிக்கும் போது காதலித்து பின்னர் மணம் முடித்துக்கொண்டனர். இருவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 2015 ஆம் ஆண்டு அரசியலில் கால்பதித்த ரிஷி, குறுகிய காலத்தில் பல உயரங்களை அடைந்தார். போரிஸ் ஜான்சன் பிரதமராக தெர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இங்கிலாந்தின் நிதியமைச்சர் பதவி ரிஷி சுனக்கிற்கு வழங்கப்பட்டது.
இங்கிலாந்தின் பிரதமர் தேர்தலில் லிஸ் ட்ரஸ் -உடன் இறுதி சுற்றுவரையில் முன்னேறினார் ரிஷி. ஆனால், லிஸ் ட்ரஸ் அந்த தேர்தலில் வெற்றிபெற்றார். இந்நிலையில், சமீபத்தில் லிஸ் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் காரணமாக ரிஷி சுனக் இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
மசால் தோசை
பெங்களூருவில் புகழ்பெற்ற உணவகங்களில் ஒன்று வித்யார்த்தி பவன். உணவு விரும்பிகளுக்கு மத்தியில் மிகவும் புகழ்பெற்ற இந்த உணவகம் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ரிஷி சுனக், வித்யார்த்தி பவனில் மசால் தோசை சாப்பிடும் பழைய புகைப்படம் ஒன்று தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் இந்த புகைப்படத்தை வித்யார்த்தி பவன் உணவகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
இந்நிலையில், பெங்களூரு மக்கள் ரிஷி சுனக்கின் Throwback புகைப்படங்களை பகிர்ந்து 'பெங்களூருவின் பெருமைமிகு மருமகன்' என சோசியல் மீடியாவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
#RishiSunak is going to become the next PM of UK.
Happy to know that he will be the first Indian-origin & the youngest British Prime Minister.
We wish him good luck & may he become the most successful PM of UK by sailing through all the turbulence pic.twitter.com/JhWLtcVTu2
— Vidyarthi Bhavan (@VidyarthiBhavan) October 24, 2022
மற்ற செய்திகள்