‘ஒரு துப்பாக்கி கூடவா வெடிக்கல’.. முன்னாள் முதல்வர் இறுதி சடங்கில் போலீசாரால் ஏற்பட்ட சலசலப்பு...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதிசடங்கில் அரசு மரியாதை செய்யும் விதமாக போலீசார் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டபோது ஒரு துப்பாக்கியும் வெடிக்காத சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘ஒரு துப்பாக்கி கூடவா வெடிக்கல’.. முன்னாள் முதல்வர் இறுதி சடங்கில் போலீசாரால் ஏற்பட்ட சலசலப்பு...!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் மிஸ்ரா(82) உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் பீகார் மாநிலத்தில் 1975 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில் 3 மூன்று முறை முதலமைச்சராக இருந்துள்ளார்.

இவரது இறுதிச்சடங்கு அவரின் சொந்த ஊரான சுபால் மாவட்டத்தில் உள்ள பாலுபா பஸார் பகுதியில் நடந்தது. முன்னாள் முதல்வர் என்பதால் ஜெகன்நாத் மிஸ்ராவுக்கு முழு அரசு மரியாதை செய்யப்பட்டது. அப்போது மரியாதை செலுத்தும் விதாமாக போலீசார் துப்பாக்கியை வானை நோக்கி சுட ஆரம்பித்தனர். ஆனால் ஒரு துப்பாக்கியும் வெடிக்காததால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்நிலையில் துப்பாக்கிகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என போலீஸ் டி.ஜி.பி -க்கு அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

JAGANNATHMISHRA, BIHAR, POLICE, CEREMONIAL, CM, RIFLES, FUNERAL