“இனி பாத்தேன்.. பாத்த இடத்துலயே அடிப்பேன்!”.. வார்னிங்கை மீறி சென்ற வனமகன்கள்.. ‘தலை தெறிக்க’ ஓடவிட்ட ‘காட்டு யானை’!.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமீப காலமாகவே நீலகிரி, உதகை, கேரளா உள்ளிட்ட இடங்களில் உள்ள யானைகள் மிகுந்த வனப்பகுதிகளில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான சிறு சிறு உரசல்கள் அதிகமாகியுள்ளன.
அண்மையில் கோவையைச் சேர்ந்த இரண்டு பெண்களை அப்பகுதிக்கு வந்த காட்டு யானை தாக்கியதை அண்டை வீட்டார் வீடியோ எடுத்து வெளிவிட்டனர். இதேபோல் சில இடங்களில் யானைகள் தர்பூசணியை எடுத்து சாப்பிட்டதும் வைரலாகியது.
அப்படித்தான் தற்போதைய வீடியோ ஒன்றில், வனப்பகுதிக்கு செல்லும் வனத்துறையினர் குட்டியுடன் சாலையைக் கடக்கும் யானையைப் பார்த்ததும் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு பவ்வியமாக காத்திருக்க, அவர்களுக்கு எதிரே ஒரு காரும் அப்படி நிற்கிறது. அந்த காரையும் மீறி இருசக்கர வாகனத்தில் லுங்கியும் சகிதமுமாக 2 பேர் யானை கடந்து செல்லும் சாலையில் செல்ல முயலுகின்றனர்.
ஆனால் இங்கிருந்த வனத்துறையினர் அவர்களை, “வர வேண்டாம் நில்லுங்கள்” என எச்சரித்து கூற, அதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிட்டே சென்றதும் யானையை பார்த்து பயந்து வண்டியுடன் இருவரும் யூ-டர்ன் அடிக்க முற்பட, ஆனா அதற்குள் வண்டி யானையிடமும், யானை அவர்களிடமும் நெருங்க, அவ்வளவுதான் வண்டியில் இருந்து விழுந்த அந்த இரு வனமகன்களும் வண்டியை அப்படியே போட்டுவிட்டு தலைதெறிக்க ஓடுகின்றனர். பின்னர் அவர்களை விட்டுவிட்டு
#IrresponsibleBehaviour threatens #human and #animal lives. These two-wheeler riders did not listen to FD staff and decided to go ahead while elephants were crossing and got charged at.#AnimalCrossingNH #conservationchallenge pic.twitter.com/IcgyAdKyCq
— Sreedhar V (@sreedharelephas) April 28, 2020
யானை தன் குட்டியுடன் செல்ல தொடங்குகிறது.இந்த காட்சியை தூரத்தில் இருந்து பார்த்த வனத்துறைனர், ‘நாங்கதான் சொன்னம்ல’ என்கிற ரீதியில் வீடியோ எடுத்து பதிவிட்டுள்ளனர். இதனை வனத்துறை அதிகாரி ஒருவர் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.