‘ஒரே ஒரு நொடிதான்’... ‘மருமகள் செய்த காரியம்’... 'மாமியாருக்கு நேர்ந்த கொடூரம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஓய்வு பெற்ற துணை காவல் கண்காணிப்பாளரை, காவல் ஆய்வாளரான அவரது மருமகள், அடித்ததுடன், கடித்து வைத்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம் இந்தூரில் துணை காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் பிரபா சவுகான். இவர் தன் குடும்பத்தில் அனைவருமே காவலர்களாக இருப்பதால், தனது மகனுக்கு ஸ்ரத்தா பவார் என்ற காவல் ஆய்வாளரை மணம் முடித்து வைத்தார். இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று இரவு காவல்நிலையத்தில் இருந்து தாமதமாக வந்த மருமகளுக்கு வீட்டின் கதவை மாமியார் திறந்துள்ளார். கதவைத் திறந்த வேகத்தில் தனது தாய் மற்றும் சகோதரியுடன் வந்த மருமகள், தன்னையும், தனது கர்ப்பிணி பெண்ணையும் தாக்கியதாகப் புகார் அளித்துள்ளார். மேலும் மருமகள் ஸ்ரத்தா தனது கையைக் கடித்து வைத்துவிட்டதாக மாமியார் பிரபா சவுகான் கடந்த திங்கள்கிழமையன்று காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து காயம்பட்ட ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான மாமியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Indore: Prabha Chouhan, Retired Deputy Superintendent of Police, alleges she was beaten up by her daughter-in-law Shraddha Pawar who is a Sub-Inspector, on the intervening night of 28 & 29 July. Prabha Chouhan was taken to hospital for treatment. #MadhyaPradesh pic.twitter.com/mAYz5RNPGW
— ANI (@ANI) July 29, 2019